‘கோமாளி’ திரைப்படத்தின் பாடல் புத்தகம் வெளியீடு!!

நடிகர் ஜெயம்ரவி நடித்துள்ள கோமாளி திரைப்படத்தின் பாடல்களை புத்தக வடிவில் சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


90’S இன் நினைவுகளை இனிமையாக நினைவு கூறும் விதத்தில் இந்த புத்தகம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளர் ஹிப்ஹொப் தமிழா ஆதி தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் யுகம் வருவதற்கு முன்பு வரை, திரைப்படங்களின் பாடல்கள் புத்தக வடிவில் வெளியாகிக்கொண்டிருந்தன. பெரும்பாலானவர்கள் அந்த பாடல் புத்தகங்களை பார்த்து பாடிகொண்டிருந்தார்கள்.

தற்போது திரைப்படத்தின் பாடல்கள் இசை வெளியீட்டாக வெளியாகிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிவரும் ‘கோமாளி’ திரைப்படம் வரும்  15ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நடிகை காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே இருவரும் கதாநாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

வெல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஹிப்ஹொப் தமிழா இசையமைத்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.