வடக்கு கிழக்கில் தீவிரமடையும் மதவாதம்!!

வடக்கு – கிழக்­கில் இந்து சம­யத்­துக்கு மிகப் பெரிய அச்­சு­றுத்­தல் ஏற்­பட்­டுள்­ளது. வடக்கு – கிழக்­கில் பௌத்­த­ம­ய­மாக்­கல் வேக­மாக இடம்­பெ­று­கின்­றது.


இந்த விட­யங்­கள் தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அக்­கறை காட்­ட­வில்லை. ஒரு சில விட­யங்­க­ளைச் செய்­தி­ருந்­தா­லும், பௌத்த மய­மாக்­க­லைத் தடுக்க காத்­தி­ர­மான நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­விட்­டது. இவ்­வாறு இந்து அமைப்­புக்­கள் குற்­றஞ் சுமத்­தி­யுள்­ளன.

நல்லை ஆதீ­னத்­தில் அண்மையில் இந்து அமைப்­பு ஒன்று, கூட்­ட­மைப்­பி­ன­ருக்­கும் இடை­யில் சந்­திப்புக்கும் நடை­பெற்­றது.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் கலந்து கொண்­டார். இந்து சம­யக் குரு­மார்­கள், இந்து மதத் தலை­வர்­கள், இந்து அமைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் என்று பல­ரும் பங்­கேற்­றி­ருந்­த­னர்.

கலா­நிதி ஆறு.திரு­மு­ரு­கன் இந்­தச் சந்­திப்­பில் பங்­கேற்று பல தக­வல்­களை வெளி­யிட்­டார்.

கன்­னியா வெந்­நீ­ருற்று விவ­கா­ரத்­தில் தற்­கா­லி­கத் தீர்­வு­தான் காணப்­பட்­டுள்­ளது. அந்­தப் பகு­தி­யில் நீண்­ட­கா­ல­மாக இருந்த பிள்­ளை­யார் ஆல­யம் மீண்­டும் அமைக்­கப்­ப­டா­விட்­டால் பௌத்த அடை­யா­ள­மாக அந்­தப் பிர­தே­சத்தை மாற்­றி­வி­டு­வார்­கள். பிள்­ளை­யார் ஆல­யத்­துக்கு அரு­கில் சிங்­க­ளத்­தில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்ட குறிப்­பில், வர­லாறு திரி­வு­ப­டுத்தி எழு­தப்­பட்­டுள்­ளது. கன்­னியா வெந்­நீர் ஊற்று சிங்­கள மன்­னன் காலத்­தில் உரு­வாக்­கப்­பட்­ட­தாக வர­லாற்றை மாற்­றி­யுள்­ளார்­கள்.

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் சட்­டத்­து­றை­யி­லும், விஞ்­ஞா­னத்­து­றை­யி­லும் 70 சத­வீ­த­மான சிங்­கள மாண­வர்­கள் கற்­கின்­ற­னர். கிளி­நொச்­சி­யில் அமைந்­துள்ள பல்­க­லைக்­க­ழக வளா­கம் முழு­வ­தும் பௌத்த மய­மாக்­கப்­பட்­டுள்­ளது. பல்­க­லைக்­க­ழ­கத்தை நிர்­மா­ணித்­த­வர் அங்கு புத்­தர் சிலை வைத்­தார். பின்­னர் மூன்று சம­யங்­க­ளுக்­கும் காணி­கள் ஒதுக்­கப்­பட்­டன. ஆனால் இந்து ஆல­யமோ, கிறிஸ்­தவ ஆல­யமோ அங்கு அமைக்­கப்­ப­ட­வில்லை. விகாரை கட்­டப்­பட்டு விட்­டது.

மாங்­கு­ளத்­தி­லி­ருந்து இயக்­கச்சி வரை பல விகா­ரை­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. காங்­கே­சன்­து­றை­யைச் சுற்றி விகா­ரை­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. மாத­க­லில் சங்­க­மித்தை வந்­தி­றங்­கிய இடத்­தின் பெய­ரையே மாற்­றி­விட்­ட­னர். அந்­தப் பகு­தியி­லுள்ள இந்து ஆல­யங்­க­ளில் வழி­ப­ட­மு­டி­யாத நிலை இருக்­கின்­றது.

நாவற்­கு­ழி­யில் பெரு விகாரை அமைக்­கப்­பட்டு திறந்­து­வைக்­கப்­பட்­டுள்­ளது. சுற்­று­லாப் பய­ணி­கள் வந்து தங்­கு­வ­தற்­கென மாத­க­லில் தங்­கு­மிட வச­தி­கள் ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால், எங்­கள் சுக்­கி­ல­வா­ரச் சத்­தி­ரத்தை இரா­ணு­வத்­தி­னர் தங்­க­ளு­டைய நடை­பா­தைப் பயிற்­சிக்­கு­ரிய இட­மா­கப் பயன்­ப­டுத்­து­கி­றார்­கள். இது­தொ­டர்­பாக யாரா­வது நாடா­ளு­மன்­றத்­தில் கேள்வி கேட்­கி­றீர்­களா?

போர்க் காலத்­தில் தரை­மட்­ட­மாக்­கப்­பட்ட ஆல­யங்­களை மீள அமைப்­ப­தற்கு 5 அல்­லது 6 கோடி ரூபா தேவைப்­ப­டு­கின்­றது. பௌத்த ஆல­யங்­க­ளுக்கு நிதி அள்­ளிக் கொடுக்­கப்­ப­டு­கின்­றது. இந்து ஆல­யங்­க­ளுக்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஆகக் கூடி­யது 10 லட்­சம் ரூபா மாத்­தி­ரமே வழங்க முடி­கின்­றது.

காங்­கே­சன்­துறை சடை­யம்மா மடத்­துக்கு அரு­கில் அர­ச­த­லை­வர் மாளிகை கட்­டப்­பட்­டுள்­ளது. நாட்­டில் ஏற்­பட்ட அசா­தா­ரண சூழ்­நிலை கார­ண­மாக கடந்த 30 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக சடை­யம்மா மடத்­தில் விளக்கு எரி­ய­வில்லை. மடு­வில் ஒரு­நாள் விளக்கு எரி­ய­வில்­லை­யென்­றால் நீங்­கள் ஏற்­பீர்­களா? அல்­லது விகா­ரைக்கு இப்­ப­டி­யொரு நிலை ஏற்­பட அனு­ம­திப்­பார்­களா?

நயி­னா­தீ­வில் நாக­பூ­சணி அம்­மன் ஆல­யத்­துக்கு 90 சத­வீ­த­மான சைவ­மக்­கள் சென்று வழி­ப­டு­கி­றார்­கள். ஆனால், நயி­னா­தீ­வுக்­குச் செல்­லும் படகு முத­லில் விகா­ரைக்­குத் தான் செல்­கி­றது. பௌத்­தர்­கள் பட­கில் ஏறி­னால் என்ன ? ஏறா­விட்­டா­லென்ன? இது­தான் நிலமை. இத­னைக் கூட எங்­க­ளால் தடுக்க முடி­ய­வில்­லை­ யென்­றால் சைவ­மக்­கள் அடுத்து என்ன தான் செய்­வது?

இது­போன்ற பிரச்­சி­னை­க­ளால் தான் நல்லை ஆதீன சுவா­மி­கள், யாழ்ப்­பா­ணம் சின்­மயா மிசன் சுவா­மி­கள் மற்­றும் நாங்­க­ளும் இணைந்து எங்­கள் கதி இது­தா­னென இந்­தி­யத் தூத­ர­கத்­தி­டம் மனுக் கைய­ளித்­தோம்.

திரு­கோ­ண­மலை கன்­னியா விவ­கா­ரத்­தில் நீதி­மன்­றத்­தில் வழக்­குப் பதிவு செய்து எங்­க­ளுக்கு ஒரு இடைக்­கால உத்­த­ர­வைப் பெற்­றுத் தந்­த­மைக்­காக உங்­க­ளைப் பாராட்­டு­கின்­றோம். ஆனால், இது­வொரு நிரந்­த­ர­மான தீர்வா? என்­ப­தில் கேள்­வி­யெ­ழு­கி­றது.

தனிப்­பட்ட வகை­யில் அறிக்­கை­கள் விடு­வ­தால் எந்­தப் பய­னு­மில்லை. தற்­போது நில­வும் அர­சி­யல் சூழ்­நி­லை­க­ளைப் பயன்­ப­டுத்­தி தமிழ்­மக்­கள் எதிர்­நோக்கி வரும் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்­கும் எவ்­வாறு தீர்­வைப் பெற்­றுக்கொள்­ள­லாம் என்­பது தொடர்­பில் தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கவ­னம் செலுத்த வேண்­டும்.

கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் அவ­ச­ர­மாகக் கூடி சைவ­மக்­கள் எதிர்­நோக்­கி­யுள்ள அடிப்­ப­டைப் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் ஆராய வேண்­டும் – –என்­றார் ஆறு­.தி­ரு­மு­ரு­கன்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.