மக்களுக்காக உயிரை விட தயாராக உள்ளேன்!!

மக்களுக்காக இந்த நிமிடமே உயிரை விடவும் தயாராக இருக்கிறேன். எனது தந்தை போல் நாட்டுக்காக நடு வீதியில் உயிரை தியாகம் செய்யவும் நான் தயார்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இராணுவ, பொருளாதார, சமூக பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்ட வேண்டும். புலனாய்வுத்துறைய மேம்படுத்த வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் கவனிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
தீவிரவாதத்திற்கு இங்கு இடமில்லை. தீவிரவாதிகள் முற்றாக ஒழிக்கப்படுவார்கள். இவற்றை உருவாக்குவது யார்?. அது எப்படி உருவாகின்றது என்பதை பார்க்க வேண்டும்.
நாட்டின் இறையாண்மையை நாம் பாதுகாப்போம். நாட்டினை பிரிக்க எந்த சக்திக்கும் இடமளியோம். இன, மத பேதமற்று செயற்பட்டு புதிய இலங்கையை உருவாக்குவோம். நாங்கள் பலவீனமானவர்கள் இல்லை. நான் பயந்தவன் இல்லை!. நவம்பரில் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வேன்.

No comments

Powered by Blogger.