நல்லூரில் கலாசார உடையில் செல்லும் போது பரிசோதனைகள் இறுக்கம் குறைவு!!

முகப்புத்தகத்தில் பொங்குவது போல நல்லூரில் பாதுகாப்பு கெடுபிடிகளில்லை.!!

 தவிர்க்க முடியாத பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

 கலாசார உடையில் செல்லும்போது பரிசோதனைகள் இறுக்கம் குறைவு!!


 பாதுகாப்பு தரப்பினர் ஆலய சுற்று வீதியில் பாதணிகள் இன்றியே கடமையில் ஈடுபடுகின்றனர்.


 தெற்கு வீதியை மேற்கில் உள்ள ஐஸ்கிறீம் கடைகளுடன் இணைக்கும் பாதை மூடப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயம் .

ஐஸ்கிறீம் கடைத் தொகுதிக்குள் செல்ல பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லை

 மேற்கு பகுதியில் சிவன்கோவில் பகுதி ஊடாக மட்டும் ஆலயத்துக்கு வந்து போகலாம்

 இம்முறை கோவில் வெளிமண்டபத்தில் சுவாமி வரும்போது படம் எடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளமை நல்ல நடைமுறை .


மொபைல் கமெரா பக்தர் தொல்லையில் இருந்து ஒரளவு விடுதலை .


உங்கள் சிறார்களை துர்க்கா மணிமண்டபம் மற்றும் நல்லை ஆதீன மண்டபங்களில் மாலை 6.45 தொடக்கம் நடைபெறும் இசை மற்றும் அறநெறி நிகழ்வுகளுக்கும் அழைத்து செல்லுங்கள்


 குறிப்பு : முன்னர் பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்திருக்கலாம். அதையே காரணமாக வைத்து தவிர்ப்பவர்களுக்காகவே இந்த பதிவு. #நல்லூர்

No comments

Powered by Blogger.