முப்பெரும் விழாவில் விஜயகாந்த்: மகனுக்கு புதிய பொறுப்பு?

தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் உடல் நலக் குறைவால் சுமார் ஓராண்டாகவே தொண்டர்களிடம் இருந்தும் தேமுதிக நிர்வாகிகளிடம் இருந்தும் முழுதாக விலகியே இருக்கிறார்.


கடந்த மக்களவைத் தேர்தலில் கூட விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார் என்று தெரிவிக்கப்பட்டு கடைசி நாளன்று சில மணி நேரம் பிரச்சார வேனில் ஊர்வலமாக சென்று ஓரிரு வார்த்தைகளையே பேசினார் விஜயகாந்த். இது தேமுதிக தொண்டர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.


இந்த நிலையில்தான் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி தேமுதிகவின் முப்பெரும் விழா மாநாடு திருப்பூரில் நடக்க இருப்பதாகவும் அதற்கு விஜயகாந்த் தலைமை தாங்க இருப்பதாகவும் தேமுதிக தலைமைக் கழகம் இன்று செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
https://www.tamilarul.net/
விஜயகாந்த் பிறந்தநாள் விழா, கட்சியின் 15 ஆம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்று நடக்கும் இந்த முப்பெரும் விழாவில் விஜயகாந்த் கலந்துகொண்டு பேசுவாரா என்று தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
”தேர்தலுக்கு முன்னும் பின்னும் விஜயகாந்தை தேடிச் சென்ற பல முக்கிய நிர்வாகிகள் கூட அவரைப் பார்க்க முடியவில்லை. அவர் பேச்சுப் பயிற்சி எடுத்து வருகிறார். பேசுவார் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் கேப்டனை பார்க்கவே முடியவில்லை. இந்நிலையில் பல மாவட்டங்களிலும் நிர்வாகிகள் திமுக பக்கம் சென்று வருகிறார்கள். தேமுதிக தனது கட்டமைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வருகிறது.
இதனால்தான் இப்போது மாநாடு கூட்டியிருக்கிறார்கள். இந்த திருப்பூர் மாநாட்டில் கேப்டன் வருவது நிச்சயமோ இல்லையோ கேப்டனின் மகன் பிரபாகரனுக்கு முக்கிய பொறுப்பு கட்சியில் வழங்கப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள் தேமுதிகவின் சீனியர்கள் சிலர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.