ஈழதேசத்தை திட்டமிட்டு அழிப்பதற்காக அமெரிக்கா  இந்தியா சதிவலையில்  இந்துமதமும் ஒரு கருவியா??

மாணவர்களை முட்டாளாக்கும் யுத்தம் .
ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு தனியார் கல்வி நிலையத்தில் கற்ப்பிக்கும் போது ஒரு மாணவி வரவில் ஒழுங்கின்றி காணப்பட்டாள் அது பற்றி அன்று எல்லோர் முன்னிலையிலும் எழுப்பி விசாரித்தேன் நான் பாதரிடம் சென்றேன்



அதற்காகத் தான் வரவில்லை என்றாள் ஏன் சென்றீர் எனக் கேட்டேன் ஆசீர்வாதம் வாங்க என்றாள் எதற்காக என்றேன் பிறந்த நாளுக்காக என்றாள் சரி உமது அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கின்னீரோ என்றேன் இல்லை என்றாள் அப்பாவிடம் என்றேன் அதுவும் இல்லை என்றாள் அதையெல்லோ முதலில் செய்திருக்க வேணும் என்றேன்



அதுசேர் பாதர் அப்பா மாதிரி என்றாள் சொந்த அப்பா வீட்ட இருக்க அது என்ன மாதிரி என்றேன் மற்ற மாணவர்களுக்கும் முன்மாதிரியாய் இருக்க அப்பாவை அழைத்துவருமாறு கூறி அனுப்பிவிட்டேன்


 வந்தவர் அப்பா மட்டுமல்ல நாலைந்து பேர் வாசலில் வந்து திட்டத் தொடங்கினார்கள் என்னை சாத்தானிடம் அனுப்புவதாகவும் நான் நரகத்துக்கு போவதாகவும் சபித்தார்கள் சனம் கூடியது மதத்துக்கெதிராக நான் பேசியதாக கதை பரப்பப்பட்டது அதற்காக நான் பின்வாங்கவில்லை


 சாத்தான் பிடிக்கவுமில்லை என்னிடமும் நரகமும் இல்லை பயப்படவுமில்லை ஆனால் அந்தப் பெற்றோருக்கு எவ்வளவு சொல்லியும் அவர்கள் நியாயத்தை கேட்பதாக இல்லை காரணம் அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாச்சே நானும் அதைவிட்டுவிட்டுவிட்டேன்


 அந்தப்பிள்ளையும் படிக்க வராமலே போனது ஆயிரம் புத்திசாலிகளுடன் விவாதிக்கலாம் ஆனால் ஒரு முட்டாளுடன் விவாதிக்கமுடியாது என்பதுதான் எனக்கு மீள மீள நினைவுக்கு வந்தது சரி அது கிடக்கட்டும் நன்றாக படிக்கக் கூடிய அழகான தோற்றத்தைக் கொண்ட அந்தப்பிள்ளையை எதேச்சையாக இரண்டுவருடங்களின் பின் வேறொரு மாவட்டத்தில் பார்த்தேன் அதிர்ந்து போனேன்


 அவளின் கூந்தலைக் காணவில்லை அவளின் காதிலிருந்து தங்க நகைகளைக் காணவில்லை அழுக்கடைந்த ஆடையைப் போர்த்தியவாறு துண்டப்பிரசுரங்களை கொடுத்துக்கொண்டிருந்தாள் வாங்கிப் பார்த்தேன்


உலகின் ஊழிக்காலம் உலகம் அழியப் போகுது எனவும் சாத்தான் வந்துவிட்டது எனவும் நிறைய எழுதப்பட்டிருந்தது இது என்னவெனக் கேட்டேன் தான் ஆண்டவனுக்கு ஊழியம் செய்வதாகவும் இது சாத்தான் உலகென்றும் சொன்னாள் என்னைத் தெரியுமா எனக் கேட்டேன்


யோசித்தபடி பேயறைந்தவளாய் நின்றாள் பாதரின் ஆசீர்வாதம் வென்று விட்டது அவளின் வாழ்வு இருண்டுவிட்டது நான் இராண்டுவருடங்களின் முன் எதை நினைத்தேனோ அதுவே நடைபெற்றது


 குறிப்பாக வன்னி போன்ற யுத்தப் பிரதேசங்களில் வாழ வேண்டிய இழஞ்சிட்டுக்களின் வாழ்வு இருண்டு போவது இப்படித்தான் அவளும் பிற பிள்ளைகளைப்போல அழகுபடலாம் படிக்கலாம் பல்கலைக் கழகம்போகலாம் காதலிக்கலாம் சாதிக்கலாம்


 வசந்த காலத்தை இனிதே சுவைக்கலாம் ஆனால் விட்டார்களா இவர்கள் ஏழை மக்கள் வாழும் இடங்களில் தேவாலயங்களைக் கட்டுதல் சிறு உதவிகளைச் செய்தல் பின் மண்டையைக் கழுவல் வாழவேண்டியவர்களை இருளில் வீழ்த்தல் என எராளம் விசத் திட்டங்கள் சட்டங்கள் இதைவிட மோசமானதே


இன்றைய சைவ சமயத்துக்குள்ளும் நுழைந்த இந்திய விசமிகளின் செயற்பாடு இவர்கள் சிவப்பு ஆடையை அணிந்தாலும் இவர்களின் நெஞ்சில் ஆயிரம் விச நாகங்கள் படமெடுத்து ஆடும் இதை அறியாத முட்டாள்ப் பயல்கள் மாணவர்களைக் காலைக் கழுவ அனுமதிப்பது


 ஏன் இனி இந்த மாணவர்கள் முதுகெலும்பற்றவராய் மொட்டை வழித்து அல்லது கூந்தலை வளர்த்து கோமாளி ஆட்டமல்லவா போடப் போகிறார்காள் குரு ஜீ குரு ஜீ என அலையப்போகிறார்கள்


 வீடு நாடு எல்லாவற்றையும் மறக்கப் போகிறார்கள் இதை யோசித்து இவர்களின் பெற்றோர் போர்க்கொடி காட்டாதது ஏன் உடனடியாக காலைக் கழுவ அனுமதித்தோரை நோக்கி பெற்றோர்கள் போராட்டக் களத்தில் இறங்க வேண்டும்


 இல்லையேல் ஆப்பு நிச்சயம் எமது முன்னோர் விட்ட தவறுகளால்தான் நாம் சமஸ்கிருதத்தில் பூசை செய்கிறோம் பூசாரிகளை பெரிய அவரென நினைத்துக் காலில் கிடக்கிறோம்


 பலர் செய்வினை செயப்பாட்டுவினையில் பணத்தை இறைக்கின்றனர் சாதாரண விவசாயி கொஞ்சங் கொஞ்சமாகச் சேர்த்த பணத்தை சாந்தி கிரிகை சுகந்தி கிரியை என்ற பெயரில் சாமிமார் பூசாரிமார் கொள்ளையடிக்கிறார்கள்



 அந்த நிலை பெருக நாம் அனுமதிக்கக் கூடாது இன்றைய குழந்தைகள் நாளைய சிறுவர்கள் இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் தலைவர்கள் காலில் விழலாமா காலைக் கழுவலாமா?



 ஈழதேசத்தை திட்டமிட்டு அழிப்பதற்காக அமெரிக்கா கத்தோலிக்க மதத்தையும் இந்தியா இந்துமதத்தையும் ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது



 அதைத் திட்டமிட்டு அழிப்போம் புரட்சியாளர்களையும் தலைவர்களையும் வளர்ப்போம் நாம் நாமாகவே இருப்போம் காலில் விழலும் காலைக் கழுவலும் அசிங்கம்

த.செல்வா
19.05.2019





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.