எரிபொருள் ஏற்றிய வாகனம் வெடித்து சிதறியது!!
கென்யாவில் இருந்து கொங்கோ நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்று விபத்துக்குள்ளான நிலையில் ஏற்பட்ட தீயினால் 20 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாரவூர்தி உகண்டாவின் மேற்கு பகுதியில் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) பயணித்துக் கொண்டிருந்த போதே சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியில் சென்று கொண்டிருந்த பிறிதொரு சரக்கு வாகனம் மீது மோதியுள்ளது.
வாகனங்கள் மோதிய வேகத்தில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி வெடித்துச் சிதறியதுடன் தீப்பிடித்தது.
இதனால் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. அத்துடன், அப்பிரதேசத்தில் அமைந்துள்ள சில வர்த்தக நிலையங்கள், சிறிய கடைகள் உட்பட பல கட்டிடங்கள் தீக்கிரையாகின.
இந்த விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் உகண்டா பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த பலர் மீட்கப்பட்டு அண்மையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை