இந்திய தூதர் தண்ணியும் பணமும் கொடுத்தால் சும்மா இருப்பார்களா?

முதலில் இந்திய தூதரும் தூதராலயமும் யாழ்ப்பாணம் வந்தார்கள்

அடுத்து அவர்கள் இந்தியாவில் இருந்து சிவலசேனை என்று மறவன்புலவு சச்சிதானத்தை கொண்டு வந்தார்கள்.


இப்போது இந்து மாநாடு என்று சாமிகளை அழைத்து வந்து மாணவர்களை கால் கழுவ வைத்துள்ளார்கள்.

கல்வி அமைச்சரின் காலில் விழுந்து வணங்க மறுத்த வன்னி மாணவனை இந்து சாமிகளின் கால்களை கழுவ வைத்து விட்டார்களே என்று நாம் கவலை கொள்ளவில்லை.

எமது கவலை எல்லாம் இவனுகள் இன்னும் என்னனென்ன கோதாரியை எல்லாம் கொண்டு வந்து தொலைக்கப் போறாங்களே என்பது பற்றித்தான்.

இவனுகள் முட்டாள்களாக இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் மாணவர்கள் மத்தியில் முட்டாள்தனத்தை பரப்ப இவர்களுக்கு யார் அனுமதி வழங்கியது?

வடையும் தேத்தண்ணியும் கொடுக்கிறார்கள் என்றாலே நம்மாளுகள் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு ஓடுவாங்கள்.

இந்திய தூதர் தண்ணியும் பணமும் கொடுத்தால் சும்மா இருப்பார்களா? இனத்தையே தூக்கி கொடுக்கிறாங்களே!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.