யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டின் குடி­தண்­ணீர்ப் பிரச்­சி­னைத் தீர்­வுக்கான ஆரம்பவேலை!

திட்டம் 2000 மில்­லி­யன் ரூபா செல­வில்! நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

சாவ­கச்­சே­ரி­யி­லி­ருந்து பருத்­தித்­து­றைக்­குச் செல்­லும் வீதி­யில் 06வது மைல் கல்­லுக்­கும் 09வது மைல் கல்­லுக்­கும் இடை­யி­லான பிர­தே­சத்­தில், உப்­பாறு நீரே­ரி­யில், கப்­பூ­து­வெளி_அந்­த­ணத் திடல் பகு­தி­யில் மிகப்பெரிய குளமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. இக்குளமானது 06 சதுர கிலோ­மீற்­றர் பரப்­பு­டை­ய­தா­க­வும், 07.50 மீற்­றர் உய­ரம் மற்றும் குளத்­தின் அணைக்­கட்டு 04 மீற்­றர் அக­லம் உடை­ய­தா­க­வும் இருக்­கும்.

வட­ம­ராட்சி நீரே­ரி­யி­லி­ருந்து மழைக் காலத்­தில் கட­லுக்­குச் செல்­லும் மழைநீர், சாவ­கச்­சேரி-பருத்­தித்­துறை வீதிக்­கும், வல்லை வெளிக்­கும் இடைப்­பட்ட பிர­தே­சத்­தில் வட­ம­ராட்சி நீரே­ரி­யில், அணை அமைக்­கப்­பட்டு புதிய துருசும் நிறு­வப்­பட்டு அங்கு நன்னீர் தேக்கப்­பட்டு, விநியோகக் குழாய்­கள் மூல­மாக 'அந்­த­ணத்திடல்' பகு­தி­யி­லுள்ள குளத்­துக்கு நீர் இறைக்­கப்­ப­டுவதுடன், குளத்­தில் 04.50 மீற்­றர் உய­ரத்­துக்கே இயந்­தி­ரம் ஊடாக இறைக்­கப்­பட்டு நீர் தேக்­கப்­ப­டும். குளத்­துக்கு நேர­டி­யா­கக் கிடைக்­கும் மழை நீரும் அத­னுள் தேக்­கப்­ப­டும். குளத்­தில் சரா­ச­ரி­யாக ஆண்­டுக்கு 24 எம்.சி.எம். நீர் சேமித்து வைக்­கப்­ப­டும்.

வட­ம­ராட்சி நீரே­ரி­யில் மழை நீர் சேக­ரிக்­கப்­பட்டு எதிர்­கா­லத்­தில் அந்த நீரேரி நன்­னீர் நீரே­ரி­யாக மாறும் வகை­யில் திட்­டம் ஆரம்­பத்­தில் வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருந்­தது. இத­னால் நாகர்­கோ­வில் பிர­தே­சத்­தில் மங்­கு­ரோஸ் தாவ­ரங்­கள் அழி­வ­டை­யும் எனத் தெரி­வித்து வன­ஜீவராசிகள் திணைக்­க­ளம் அனு­மதி வழங்­கா­மல் இழுத்­த­டித்­தி­ருந்­தது.
தற்­போது நீரேரி ஊடாக கட­லுக்­குச் செல்­லும் மேல­திக நீரையே குளத்­துக்கு இறைக்­கும் வகை­யில் திட்­டம் மாற்­றப்­பட்­டுள்­ளது. இத­னால் நீரே­ரி­யில் உள்ள நீர் வழ­மை­போன்றே இருக்­கும். 

இத்திட்­டத்­துக்­கான அலு­வ­ல­கமொன்று சர­சா­லை­யில் அமைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.