யசுசி அகாஷி - சம்பந்தன் சந்திப்பு!!
யப்பானிய இராஜதந்திரி யசுசி அகாஷி நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேசினார்.
இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் இந்த சந்திப்பின் போது ஆயுத போராட்டம் முடிவிற்கு வந்துள்ள போதும் அதற்கு காரணமாக அமைந்த தமிழ் மக்களின் கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்பததை இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.
மேலும் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதில் சர்வதேச சமூகம் பாரிய பங்காற்றியதனை சுட்டிக்காட்டிய சம்பந்தன், இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினை எட்டுவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவற்றில் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
சர்வதேச சமூகம் இனி மேலும் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாது என்பதை வலியுறுத்திய சம்பந்தன், சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கத்திற்கு நினைவூட்டி அவற்றினை நிறைவேற்ற செய்வது சர்வதேச சமூகத்தின் கடமையாகும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற தவறுகின்ற பட்சத்தில் அது தமிழ் மக்களிற்கு மாத்திரமல்ல மாறாக முழு நாட்டிற்கும் கேடானதாக அமையும் என்பதையும் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிரா சுகியாம மற்றும் தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை