வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வடக்கிற்கு விஜயம்!!
பிரித்தானிய மற்றும் சுவிட்ஸர்லாந்து நாடுகளின் உயர் ஸ்தானிகராலய பிரதிநிதிகள் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
அந்தவகையில், யாழ். வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற கிராம மக்களை பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள் இன்று சந்தித்தனர்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் முதன்மை செயலாளரான அமைதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆலோசகர் எமி ஓ பிரெயின் (Amy O’Brien) உள்ளிட்ட குழுவினரே இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளனர்.
தையிட்டி கிராமத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் காணி விடுவிப்பு, யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள், இடம் பெயர்வுகளின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதேவேளை, இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான முதன்மைச் செயலாளர், சிடோனியா கப்ரியல் (Sidonia Gabriel) இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
குறித்த குழுவினர், முல்லைத்தீவு தமிழர் மரபுரிமைப் பேரவையின் பிரதிநிதிகளை கோயில் குடியிருப்பு பொதுநோக்கு மண்டபத்தில் சந்தித்து கலந்துரையாடி உள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை