அவசரகாலச் சட்டத்தை நீக்குங்கள் - ஜோன் அமரதுங்க!!

அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ளது என்பதற்காக தேசிய பாதுகாப்பு உறுதிப்படவில்லை என அர்த்தமில்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.


நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்டுத்துவதற்கான சூழலை உறுதிபடுத்தி அரசாங்கம் கூடிய விரைவில் அவசகால சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஹோட்டல் ஷோ 2019 ' தொடர்பான விளக்கமளிக்கும் மாநாடு ரமடா ஹோட்டலில் நேற்று மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டபோதே சுற்றுலாத்துறை அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உயிர்த்தஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதே போன்று நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதே வேளை நாட்டின் தேசிய பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அவசரகால சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்காக நாட்டில் அச்சுறுத்தல் காணப்படுவதாக அர்த்தம் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதனால் தான் சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிரித்துள்ளதாகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க இதன்போது தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.