பயங்கவாத செயற்பாட்டுக்கு உதவியவர் கைது!

பயங்கரவாத செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


60 வயதுடைய குறித்த சந்தேகநபர் கண்டி – மாவனெல்லை பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.