திஹாரி பள்ளிவாசலின் மாணவர் விடுதியில் தீ!

கம்பஹா நிட்டம்புவ – திஹாரி ஜுனைட் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலின் மாணவர் விடுயில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் திடீர் தீ ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ ஏற்பட்டதையடுத்து விடுதியிலிருந்த அனைத்து மாணவர்களும் வெளியேற்றப்பட்டனர்.

குறித்த தீ பள்ளிவாசலுக்குள் பரவுவதற்கு முன்னர் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் மாணவர் விடுதியில் ஒரு கட்டடம் முழுதாக எரிந்து சேதமடைந்துள்ளது.

மின்னொழுக்கு காரணமாக இந்த தீ ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.