இந்தியாவுக்குப் பயணமாகும் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு!

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.


அதற்கமைய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் வாரங்களில் புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளது.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்திருந்தபோது, பல விடயங்கள் குறித்து அவருடன் பேசியதாகவும் தங்களை புதுடெல்லிக்கு வரும்படி அவர் கேட்டிருந்தமைக்கு அமைய விரைவில் அந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசாங்கம் அனைத்துலக சமூகத்துக்கும் அளித்த உறுதிப்பாட்டை பேணுவதை உறுதி செய்வதில் இந்தியா இன்னும் தீவிரமான பங்கை வகிக்க வேண்டுமென, இதன்போது வலியுறுத்துவோம் என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பிரச்சினைக்கு இலங்கை இன்னும் தீர்வை வழங்கவில்லை என்ற உண்மை குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பான தீர்மானத்தை ஆதரித்த இந்தியாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் பேச்சுகளுக்கு உதவிய நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கத்தினால் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டன என்றும் ஆனால் இந்த உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் கூட்டமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்போதைய சூழலில், வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகம் உணர வைக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.