தெரிவுக்குழு ஜனாதிபதிக்கு எழுத்துப்பூர்வமாக அழைப்பு!

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பு எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
இதற்கான திகதி மற்றும் நேரத்தை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது. ஜனாதிபதி திகதி வழங்கிய பின்னர், அவரை தெரிவுக்குழுவிற்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாக மாட்டேன் என அண்மையில் கூறியிருந்ததோடு, தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு தொடர்ச்சியாக அவர் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜனாதிபதி தெரிவுக்குழுவில் முன்னிலையாகாவிட்டாலும் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படும் என பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்காக பிரதி சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 20 இற்கும் மேற்பட்டோர் சாட்சியம் வழங்கியுள்ளனர்.
இதேவேளை, தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஆயுட் காலம் ஓகஸ்ட் 23ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதன் ஆயுட்காலம் செப்டம்பர் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
.jpeg
)





கருத்துகள் இல்லை