இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


இதன் காரணமாக அவதானத்துடன் செயற்படுமாறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 60 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு, இதுவரையான காலப்பகுதியில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள், தாமதமாக சிகிச்சைகளைப் பெறுவதே உயிரிழப்புகளுக்கான காரணமென்றும் அந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்திலேயே அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் டெங்கு ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.