கோட்டாவே எங்கள் உறவுகளை காணாமல் ஆக்கியவர்!!

தங்களின் அவல நிலைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவே காரணமென காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


கல்முனையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ களமிறக்கப்பட்டமை குறித்து  ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் தெரிவித்த அவர்கள், “எங்களது உறவுகளை தொலைத்தவர்கள்  பட்டியலில் மிக முக்கியமானவர்கள் பட்டியலில் இருப்பவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவே. இவரால்தான் தற்போதுவரை   நாங்கள் தெருத்தெருவாய் அலைந்து திரிகிறோம். அவரே  இதற்கு முக்கிய சாட்சியம் கூற வேண்டும்.

ஜனாதிபதியாக அவர்  வந்தால், மீண்டும் எமது உறவுகள் காணாமலாக்கப்பட்டலாம்” என மேலும் தெரிவித்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.