தமிழர் பகுதிகளில் சனத்தொகை வீதத்தை அதிகரிக்கும் செயற்றிட்டம் பாட்டாளிபுரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது!!

கடந்த கால யுத்தம் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் திட்டமிட்ட இனவழிப்புக்கள் மூலமாக குறைந்து போய் விட்ட தமிழர்களின் இனப்பரம்பலை அதிகரித்து அதன் மூலமாக வாக்காளர் தொகையினை அதிகரிக்கும் தூர நோக்குடைய ஆழமான ஒரு அரசியல் செயற்பாட்டைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  இன்று பாட்டாளிபுரத்தில் ஆரம்பித்தது.


மூதூர் கிழக்கின் பாட்டாளிபுரம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட 5கிராமங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் பிரகாரம் நான்கு பிள்ளைகளுக்கு அதிகமான பிள்ளைகளைக் கொண்ட 18 தாய்மார்கள் மட்டுமே இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களது குடும்பப் பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியமான உணவுத் தேவை போன்றவற்றை வழங்கும் நோக்கிலும்  குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கிலும்  Swiss tamil forum மற்றும் சுவிஸில் உள்ள நடேசன் திரு அவர்கள்,ஆகியோரது நிதிப்பங்களிப்புடன் பண உதவி  வழங்கி வைக்கப்பட்டது .
குறித்த நிகழ்வு இன்று பாட்டாளிபுரம் வைத்தியசாலையில் நடைபெற்றதுடன் நிகழ்வில் வைத்தியகலாநிதி பிரதாஸ் அவர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கலாநிதி ஸ்ரீஞானேஸ்வரன், மாவட்டச் செயலாளர் குகன், குடும்பநல உத்தியோகத்தர் திருமதி காளீஸ்வரி காண்டீபன் ஆகியார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நிதியுதவிகளை வழங்கி வைத்தனர். வாக்குகளுக்காக கட்சியமைக்கும் அரசியல் வாதிகள் மத்தியில் வாக்காளர்களை அதிகரிக்க நினைக்கும் இவ்வுயரிய சிந்தனையாளர்களுக்கு எம் நன்றி கலந்த பாராட்டுக்கள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.