பிறர் தமிழர்களது வரலாற்றை சிதைக்கின்றார்கள்!!

நமது கல்வெட்டுகளை வாசிக்க முடியவில்லை.. தெரியவில்லை.. வரலாறு தெரியவில்லை.. பிறர் எங்களது கல்வெட்டுகளை அழிக்கின்றார்கள்.. பிறர் தமிழர்களது வரலாற்றை சிதைக்கின்றார்கள்... என்றெல்லாம் பேசிப்பேசியே நம்மில் பலர் நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கின்றோம்...



எத்தனை பேர் தன் முனைப்புடன் இப்படி தமிழ்மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்கின்ற கல்வெட்டு பயிற்சியில் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொண்டு ஆர்வத்துடன் கலந்து கொள்ள தயாராகி இருக்கின்றீர்கள் ?

தமிழ் மக்கள் அதிகம் பேசி விட்டோம்.

 இவ்வளவு எளிதாக ஒரு கல்வெட்டு பயிற்சி என்பது கிடைப்பது அரிது. அதிலும் சென்னையில். அதிலும் 40 ஆண்டுகள் களப்பணியில் ஈடுபட்ட கல்வெட்டு துறை நிபுணர்களின் பயிற்சியோடு ...மேலும் இன்றைய மிக முக்கிய வரலாற்று அறிஞர்கள் திரு அமர்நாத், திரு பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் போன்றோரது ஆய்வுரைகள்  இந்த இரண்டு நாள் பயிற்சியில் இடம்பெற உள்ளது.

 எத்தனை பேர் தமிழகத்தில் உள்ளவர்கள் பதிந்துள்ளீர்கள் ? 150 பேர் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய வகையில் மிகச் சிறப்பான வகையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 ஒரு ஆண்டில் இரண்டே நாட்கள் ...
இரண்டு நாட்கள் நமது வரலாற்றை அறிவதற்காக நம்மால் ஒதுக்க முடியாதா?

 அதற்கு நாம் ஆயிரம் காரணங்களை சொல்லிக் கொள்ள வேண்டுமா ?

நம் ஒவ்வொருவரையும் நாமே கேட்போம்.

 இந்த அறிவிப்பை பார்க்கும் நண்பர்கள் விரைந்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.  நீங்களும் செப்டம்பர் 28 -29 இரண்டு நாட்கள் உங்கள் நாட்களை ஒதுக்கி கொண்டு உடனே இந்த அறிவிப்பில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் பெயர்களை பதிந்து கட்டணத்தை செலுத்தி கல்வெட்டுப் பயிற்சிக்கு தயாராகுங்கள்.

தமிழர் பெருமை.. தமிழர் வரலாற்று பாதுகாப்பு என்பது உணர்ச்சிமயமான பேச்சாக மட்டும் இருந்தால் போதாது.  செயல் வடிவில் ஒவ்வொருவரும் களத்தில் இறங்க வேண்டும்.  அதற்கு முதற்படி நமது வரலாற்று அறிவை நாம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.  அதற்கு தமிழ் மரபு அறக்கட்டளை இத்தகைய பயிற்சிகளை ஏற்பாடு செய்கின்றோம்.

 வெற்றுப் பேச்சு பேசுபவர்களாக அல்லாமல் செயல்வீரர்களாக நம்மை நாம் உருவாக்கிக் கொள்வோம். நன்றி.
-சுபா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.