பாட்டாளிபுரத்தில் நிரந்தர வாழ்வாதார முயற்சியை ஏற்படுத்தும் பணியில் முன்னணி!!

கடந்த காலத்தில் பாட்டாளிபுரத்தில் ஏற்பட்டுள்ள வறுமைநிலையினையும் மக்களின் வாழ்வியல் நிலையினையும் மாற்றக் கோரி விடுக்கப்பட்ட உதவிக் கோரிக்கைக்கமைய பல வெளி நாட்டு உதவி நிறுவனங்கள் மக்களுக்கு சிறிய அளவிலான உலர் உணவுப் பொருட்களை வழங்கி
வந்தன.ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பத்துக் குடும்பங்களை பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்தி அவர்களை தமது சொந்த முய்ற்சியில் வாழ வைக்கும் செயற்றிட்டத்துக்கான குழாய்க் கிணறுகளை அமைக்கும் பணியில் முதலாவது கிணற்றை இன்றைய தினம் வெற்றிகரமாக அமைத்துள்ளது ....இதற்காக பிரித்தானியாவில் உள்ள தளிர்கள் தாயக நலன் பேண் அமைப்பு நிதியுதவியினை வழங்கியிருந்தது.
.மீன் தின்ன ஆசைப்படுபவனுக்கு வலையைக் கொடு முயற்சிப்பான்
மீன் கறியைக் கொடுக்காதே அவன்  சோம்பேறி ஆவதற்கு நீயும் உடந்தையாகுவாய்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.