சுரைக்காய் தோசை -ஆரோக்கிய உணவு!!

தேவையானவை :
பச்சரிசி – 2 கப்.
உளுந்து -1/4 கப்
சுரைக்காய் – 1 1/2கப் ( நறுக்கியது ).

வரமிளகாய் – 4
பெருங்காயம் -1/8 தேக்கரண்டி.
கருவேப்பிலை – ஒரு கையளவு.
இஞ்சி – 1 ” துண்டு – 1
சீரகம் – 1தேக்கரண்டி.
உப்பு – தேவையானஅளவு.


செய்முறை :
அரிசி மற்றும் உளுந்தை தண்ணீரில் கழுவி ,4 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

சுரைக்காயினை தோல் சீவி , விதைகளை நீக்கிவிட்டு ,சிறுதுண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.நறுக்கிய சுரைக்காயினை தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும்.

 வரமிளகாய் , சீரகம் , கருவேப்பிலை , இஞ்சி , பெருங்காயம் ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
ஊறவைத்த அரிசி மற்றும் உளுந்தை ,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.

 அரைத்த மாவுடன் , அரைத்த சுரைக்காய் விழுது , வரமிளகாய் மசாலா விழுது,உப்பு சேர்த்து ஒரு முறை நன்றாக கலங்கும்படி அரைத்துக்கொள்ளவும்.
 மாவை குறைந்தது 4 மணிநேரம் புளிக்கவைக்கவும்.

 தோசை கல்லை சூடாக்கி ,சிறிது நெய் தடவி ,ஒரு கரண்டி மாவை மெல்லிய தோசையாக ஊற்றி , சிறிது எண்ணெய் தெளித்து பொன்னிறமாக வேகவிடவும்.

 தோசையை திருப்பி ,2 நிமிடம் வேகவிடவும்.

 தோசை வெந்ததும் , சூடாக பரிமாறவும்.
 வெங்காய சட்னியுடன் பரிமாற அருமையாக இருக்கும்.
குறிப்பு :
 அரைத்தவுடன் மாவு புளிக்காமலுமும் உடனே தோசை செய்யலாம் ,
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.