முருகனும் தெய்வம் திலீபனும் தெய்வம்.!!

திருவிழா என்றதும் தித்திக்கிறது மனது
திருமுருகா உன்னில் பத்திக்கிறது மனது
நல்லூர் வீதியை சுற்றுது வேலாயுத மனது
நல்வினை வரவேண்டும் அரோகரா இனிது.

நல்லூர் வீதியில் பசி கிடந்த புனிதம் யார்
நாவரண்டு கிடந்த அந்தத் திலீபம் யார்
இனம் வாழப் பசி கிடந்த அந்தத் தமிழன் யார் - அவனை
இலாப நட்ட வணிகத்திற்காக குப்பையாக்கியது யார்.

முருகனும் தெய்வம் திலீபனும் தெய்வம்
நல்லூர் வீதியில் இருவரும் எமக்கு கடவுள் தான்.
வணிகத்திற்காக உன் வீட்டு வாழ்வுக்காகத் தமிழா
வரலாற்றுத் தெயவத்தை குப்பையாக்குவது அழகா.

நல்லூர் கந்தனுக்கு பூ அலங்காரம் பக்தி மயம்.
உனக்காக பசி கிடந்தவனுக்கு குப்பை அலங்காரமா.
மறப்பது இயல்பு மனச்சாட்சியை அழித்து வாழாதே
வணிகம் என்ற பெயரில் வரலாற்றை வீழ்த்தாதே.

இலாபப் பணத்தை வீட்டில் இருந்து எண்ணும் போது
இலட்சிய தியாகத்தை எண்ணு பணத் தரம் குறையும்.
திலீபத்தின் தடத்தைப் போய் புனிதமாக்கு தமிழா
தீயாகிக் குப்பையை எரி நீ விடிவாய் விடிவாய் தமிழா....

   -கரைப்பரிதி.-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.