கோயில் திருவிழாக்கள் : பின் யுத்தகால உளவியல் ஆற்றுப்படுத்துகை மையங்கள்!!
பின் போர்க்கால சூழலில் கோயில் திருவிழாக்களை முன்னிட்டு நமது மக்கள் ஒன்றிணைவது இன அழிப்பு அரசின் கைக்கூலிகளுக்கு பெரும் பதட்டத்தை உருவாக்குவதை காணக்கூடியதாக இருக்கிறது.
காரணம் மிக எளிமையானது.
2009 இன அழிப்பு நடந்து முடிந்த கையோடு இந்த இனம் ஒரு பேதலித்த கூட்டு உளவியலுக்குள் வந்து சேர்ந்தது.
உண்மையில் இந்த இனத்திற்கு உடனடியாகத் தேவைப்பட்டது ஒரு கூட்டு உளவியல் ஆற்றுப்படுத்துகைதான்.
சிங்களத்திற்கு உடந்தையாக இருந்த ஐநா உட்பட மேற்குலகம் செய்திருக்க வேண்டியதும் இதுதான்.
ஆனால் அது நடைபெறவில்லை.
சில அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் தாமாக முன் வந்த போதும் சிங்களம் தொடர் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இதைத் தடுத்தது மட்டுமல்ல போராளிகள்/மக்கள்/ கொல்லப்பட்டோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் குடும்பங்கள்/ போரில் ஊனமுற்றோர்/ விதவைகள் மற்றும் அரை விதவைகளை கொண்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள்/ தனித்து விடப்பட்ட சிறார்கள் மற்றும் முதியவர்கள் என்று கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியுள்ளவர்களை பல தொகுதிகளாகப் பிரித்து அவர்களுக்கிடையில் ஒரு இடைவெளியை உருவாக்கி பல்வேறுபட்ட உளவியலைப் பிரதிபலிப்பவர்களாக
அவர்களை மாற்றியது.
ஒரு கட்டத்தில் தமது ஊனப்பட்ட உளவியலை ஒவ்வொரு தரப்பும் விரித்தும் பிரித்தும் வளர்த்துக்கொள்ள வேண்டிய சூழலையும் உருவாக்கியது.
முடிவாக வசைபாடல்களும் பறக்கணிப்பும் பல்வேறு வடிவங்களாக வெளித்தளப்பட்டன.
விளைவாக, முழுமையான மன நோயாளிகளின் கூடாரமாகவே நமது தேசம் உரு மாறியிருந்தது.
இதை இனஅழிப்பு அரசும் அதன் அடிவருடிகளும் அறுவடை செய்தார்கள்.
அன்று அதன் சாட்சியங்களாக - எச்சங்களாக நமது மக்கள் இருந்தார்கள்.
ஆனால் முழுமையாக இல்லாவிட்டாலும் தற்போது குறிப்பிடத்தகுந்தளவு நமது மக்கள் தமது ஊனப்பட்ட உளவியலை சுயமாகவே ஆற்றுப்படுத்திக் கொண்டார்கள்.
எந்த அவலத்திற்கும் இன அழிப்பு அரசு முற்றுப்புள்ளி வைக்கவில்லை ஆனாலும் இந்த மேஜிக் நடந்தது எப்படி?
அவர்கள் நம்பிய ஐதீகங்களும், குல தெய்வ வழிபாடுகளும் அவர்களை அவர்களாகவே மீள வழி சமைத்துக் கொண்டது.
ஒரு இனத்தின் கூட்டு உளவியல் ஆற்றுப்படுத்துகை மையங்களாக கோயில்களும், குல தெய்வங்களும், குறி செல்பவர்களும், "உரு" ஆடுபவர்களும் மாறிப் போனார்கள்.
கேட்பதற்கு நாதியற்ற ஒரு சூழலில் மக்களும் கூட்டாக கூடி நின்று தமது ஆற்றாமையை வெளிப்படுத்தும் மையங்களாக அவை இயல்பாகவே மாறிப் போயின்.
"காணாமல் போன உங்கள் பிள்ளைகள் -கணவன்மார் வருவார்கள், நீங்கள் நிலம் மீட்டு வீடு திரும்புவீர்கள்" என்று குறி கேட்பதனூடாக தம்மை மீட்டெடுத்தார்கள் மக்கள்.
எதிரிகளை விடுவோம், நமது
தமிழ் அரசியல்வாதிகளோ, அமைப்புக்களோ, பகுத்தறிவு- மூட நம்பிக்கை குறித்து வகுப்பெடுப்பவர்களோ யாரும் எமது மக்களின் உளவியலை சீர் செய்ய வரவில்லை மாறாக எமது இனத்தின் மரபையும் தொன்மத்தையும் பேணும் ஐதீகங்கள்தான் அவர்களை மீட்டெடுத்தது.
அது மட்டுமல்ல பல தொகுதி உளவியாலால் துண்டாடப்பட்டுள்ள மக்கள் குழுமம் ஒன்றிணையும் இடமாகவும் கோயில்களே மாறியும் போயின.
பேரழிவைச் சந்தித்த இனம் ஒன்று மீளிணைதல் அல்லது ஒருங்கிணைதல் என்பது அதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் போராட்ட சக்திகளான போராளிகளுக்கும், மக்களிற்கும் இடையிலான உளவியலை சீர்படுத்தல் என்பதிலிருந்தே தொடங்குகிறது என்கிறது 'நந்திக்கடல்'.
கோயில் திருவிழாக்களை முன்னிட்டு ஒன்றிணைந்த எமது மக்கள் குழுமத்தின் திரட்சியை இந்த கூட்டுப் பெறுமானங்களின் பின்னணியில் வரையறுத்துக்கொள்ள முடியும்.
இதன வழியேதான் நல்லூர், வற்றாப்பளை, சன்னிதி என்று மக்கள் ஒன்று திரள்வது அவர்களது உளவியல் ஆற்றுப்படுத்துகையாகவும், ஒரு எதிர்ப்பு அரசியல் வடிவமாகவும் அடையாளம் காணமுடியும்.
இன அழிப்பு அரசும் அதன் அடி வருடிகளும் பதட்டமடைவதற்கு இதுதான் காரணம்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை