தமிழர்களின் பூர்வீக தாயகமான வடக்கு கிழக்கு இலங்கையின் ஒடுக்குமுறை ஆட்சியின் கீழ் உள்ளது!!

கொசோவா மற்றும் போஸ்னியா இன மாகாணங்கள் தங்கள் அடக்குமுறை ஆட்சியாளரான செர்பியாவிலிருந்து பிரிக்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற பிற மேற்கத்தேய உறுப்பினர்களின் உதவியுடன் சமஸ்டி ஆட்சியுடன் தனி நாடாக பிரிந்து போக அமெரிக்கா முன்னோடியாக இருந்தது.

புதிதாக உருவான இந்த நாடுகளுக்கு இறையாண்மை இருந்தது. அதனுடன், காணாமல் போன தங்கள் சொந்த மக்களுக்கு என்ன ஆனது? என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது. சில நாடுகளில் 80 வீதம் பேருக்கு என்ன நடந்தது? என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது. அவர்களில் சிலருக்கு நல்ல செய்திகளும், சில மோசமான செய்திகளும் ஆறுதலாக இருந்தன.

இதைத்தான் நாங்களும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்கிறோம். இவர்களுக்கு தார்மீக பொறுப்புகள் உள்ளன. இவர்கள் போரின்போது இலங்கைக்கு பச்சை விளக்கு காட்டியுள்ளனர். இனப்பிரச்சினை காரணமாக மூண்ட யுத்தம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படாமல் இனப்படுகொலையுடன்   முடிந்தது. மேலும் இது பல தமிழர்களைக் காணாமல் ஆக்கியது . 

இந்த போரின் போது, ​​அமெரிக்கா இலங்கை சார்பு  பக்கத்தை எடுத்துக் கொண்டது. ஜோர்ஜ் டபிள்யூ புஷ் நிர்வாகத்தின் போது ஆரம்பித்து ஒபாமா நிர்வாகத்தின் போது போர் முடிந்தது. 

இலங்கைக்கு போரின் போது ஆதரவு கொடுத்தது ஒரு பெரிய தவறு என்று அமெரிக்கர்கள் இப்போது உணர்ந்துள்ளனர். அவர்கள் இதை பல வழிகளில் காட்டியுள்ளனர். யு.என்.எச்.ஆர்.சி.யில், இலங்கை போர்க்குற்றங்களுக்கான அமெரிக்கத் தீர்மானம் பல எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.