மனதோடு பேசல்-3-பேருந்து.!!
ஒரு பேருந்தைப் போல் ஊர்ந்துகொண்டிருக்கிறேன்
காலம்தன் இழுவிசையில் அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறது
பேருந்திற்கு பெற்றோல் டீசல் இரும்பு எண்ணை ஓயில் இன்ன பிற பொருட்களும்
சில பயணிகளும் ஓட்டுனனும் சாரதியும்
அடங்கல் போல்
என்னுள்ளும் உன்மீதான பிரிவு துயர் காதல் கோபம் பேராசை இன்னபிற உணர்வுகளும்
சில மனிதர்களும் கடவுளரும் அடக்கம்
தினந்தினம் உணர்வின் இழுவிசையிலும்
காலத்தின் கேள்விகளிலும் சிக்குண்டு சிதறி
உருக்குலைந்து உடையுண்டு போகையில்
என் மனதை உருட்டி விடுகின்றேன் உன்னிடம்
மனம் மிதந்து மிதந்து வண்ணத்துப் பூச்சியாகி பூக்களின் மகரந்தங்களை ஆங்காங்கே சிதறி காதல் விருட்சங்களுக்கு
விதை தூவி நீள்கிறது
இதை எழுதிக் கொண்டிருக்கையில்
பேருந்து கொடிகாமச் சந்தில் அழுதபடி செல்கிறது
மனம் என்னவோ
காமத்துக்கு கொடிகட்டி வெற்றி வாகை சூடியதால்
கொடிகாமமென உருவானதோ வென கற்பனை நெய்கிறது
வீதியின் மதிலிறகுகளில் கைகூப்பிய சில ஆசாமிகளின் படம் கர்ச்சிக்கக் கண்டேன்
வீதியோ மேடு பள்ளமென பேருந்தை தின்று கொண்டிருக்க
மனமும் உன்மீதான நினைவில் லயித்து விடுகிறது
விபத்தின் மேல் நகரும் பேருந்து போல்
உன்நினைவின் மேல் நகர்கிறேன்
கிளையிலிருந்து வீழ்ந்த மலர்
மீண்டும் கிளைக்குத் திரும்புகிறது
ஓ வண்ணத்துப் பூச்சியே!
என ஒரு கவிஞன் பாடியதைப் போல்
உருண்டு வருகிறது
மீளவும் என் மனம்
நீ அப்படியே இருக்கிறாய்
கொடி காம வீதிகளைப் போல்
நானோ பேருந்தாகி வலிகளைக் கடக்கிறேன்.

.jpeg
)

கருத்துகள் இல்லை