ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வெள்ளிவிழா!!

1994 ல் சிவகங்கை கோட்டையூரிலிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை நகரான சென்னைக்கு வந்த ரோஜா முத்தையா நூலகத்திற்கு வெள்ளிவிழா தொடங்கி இருக்கிறது.Veyil Perumal பரிசல் சிவ. செந்தில்நாதன்


நான்கு லட்சம் நூல்கள்; இதில் ஒன்றரை லட்சம் தமிழ்நூல்கள்.தமிழில் முதலில் வெளியான திருக்குறள் மூலபாடம் நூல் தொடங்கி 17,18,19 ஆம் நூற்றாண்டின் நூல்கள் முதல் இந்த நொடியின் நூல்கள் வரை தமிழர்களின் பண்பாட்டுக் களஞ்சியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.Uma Maheswari Gopal

 பேராசிரியர் அனந்தகிருஷ்ணன்,சுந்தர் கணேசன்,ரெ.பாலகிருஷ்ணன்;இஆபBalakrishnan R உள்ளிட்ட மேன்மைமிகு ஆளுமைகளின் ஆலோசனையில் நூலகம் இயங்கி வருகிறது.

 இதுவரை 165 பொருண்மைகளில் கருத்தரங்கம் நடைபெற்றிருக்கிறதுMangai Arasu.சிந்துவெளிக்கான தனியான ஆய்வுப்புலம் இயங்கி வருகின்றது.

தமிழக அரசின் தொல்லியல்துறை ஆதரவில் ஐராவதம் மகாதேவன் நினைவு பன்னாட்டு ஆய்வரங்கம் தொடங்கப்பட இருக்கிறது. Puthagam Pesuthu
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் தெற்காசியாவின் முதன்மையான ஆய்வு நூலகங்களுள் ஒன்றாக இயங்குகிறது.

சென்னை தரமணி சென்ட்ரல் பாலிடெக்னிக் வளாகத்தில் இயங்கும் இந்த நூலகத்தை நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்போம்? பயன்படுத்தி இருப்போம்?Vediyappan M Munusamy Manushi

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.