கருத்து சுதந்திர ஒடுக்குமுறைக்கு எதிராக கண்டனக் கூட்டம் !!📷
பத்திரிகைதுறையில் பணியாற்றுபவர்கள் தங்கள் சொந்த கருத்துகளை, பொதுவெளியில் வெளிப்படுத்துவதற்கு, அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் தொடர்ந்து தடை விதித்து வருகின்றன. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்பட்டு, கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய ஊடகங்கள், சமீப காலமாக அரசியல் கட்சியினர் கொடுக்கும் நெருக்கடிக்கு பணிந்து பல பத்திரிகையாளர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
இந்த அபாயகரமான போக்கு தொடர்ந்தால், எதிர்காலத்தில் எந்த பத்திரிகையில் என்ன செய்தி வர வேண்டும், எந்த தொலைகாட்சியில் எந்த காட்சி ஒளிபரப்பாக வேண்டும் என்பதை பத்திரிகைதுறைக்கு வெளியே இருப்பவர்களே முடிவு செய்யும் நிலை ஏற்படும். இது ஜனநாயகத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய கேடாக முடியும். ஆகவே, ஜனநாயகத்தை காக்கும் மிகப்பெரிய பொறுப்பை பெற்ற நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, ஊடக நிறுவனங்களின் இந்த தவறான போக்கை இப்போதே எதிர்க்காவிட்டால் எதிர் வர இருக்கம் அபாயத்தை யாராலும் தடுக்க முடியாது.
ஆகவே,
பத்திரிகையாளர்களாய் ஒன்றிணைவோம்!
கருத்துரிமையை பாதுகாப்போம்!
பணிப்பாதுகாப்பை உறுதிசெய்வோம்!
பாதிக்கப்பட்டோருக்கு கரம் கொடுப்போம்!

.jpeg
)

கருத்துகள் இல்லை