தெலுங்கு ஹீரோயினும் கன்னட வில்லனும்!

பேட்ட திரைப்படத்தைத் தொடர்ந்து சசிகுமார் நடிக்கும் புதியபடம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த பேட்ட திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்திருந்தார். தற்போது அவர் ‘நா நா’என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடித்துவருகிறார். விஜய் ஆன்டணி நடிப்பில் வெளியான சலீம், அரவிந்த் சாமி, த்ரிஷா நடிப்பில் வெளிவரவிருக்கும் சதுரங்க வேட்டை-2 போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ள நிர்மல் குமார் ‘நா நா’ திரைப்படத்தை இயக்குகிறார்.
சென்னை, ஹைதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் இப்படம் ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகிறது. இந்த படத்தில் நடிகர் சரத்குமார் மிக வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். தெலுங்குத் திரைப்பட நடிகையான சித்ரா சுக்லா கதாநாயகியாக அறிமுகமாகவிருக்கிறார். மேலும் கன்னடப் படங்களில் கதாநாயகனாக நடித்த ஷரத் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். கல்பத்ரு பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளிவர இருக்கிறது.
சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் போன்றவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.