ஹரிஷின் அக்டோபர் ரிலீஸ்!

சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் பெயரிடப்படாத படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் முக்கியமானவர் ஹரிஷ் கல்யாண். அதில் கிடைத்த அறிமுகத்தைத் தொடர்ந்து அவர் கதாநாயகனாக நடித்து இரு படங்கள் வெளியாகியுள்ளன.
தற்போது அவர் நடிப்பில் ஒரே நேரத்தில் நான்கு படங்கள் தயாராகிவருகின்றன.
சஞ்சய் பாரதி இயக்கும் தனுசு ராசி நேயர்களே திரைப்படத்தில் ரியா சக்ரபோர்த்திக்கு ஜோடியாக நடித்துவருகிறார். கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் விக்கி டோனர் படத்தின் ரீமேக்காக உருவாகும் தாராளபிரபு படத்தில் தன்யா ஹோப் உடன் இணைந்து நடித்துவருகிறார்.
சிம்புதேவன் இயக்கத்தில் கசடதபற படத்தில் நடிப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. சசி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் அவர் நடிக்கிறார் எனும் தகவல் வந்த போதும் படக்குழு படம் பற்றிய எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது.
ஜி.வி.பிராகாஷ், சித்தார்த் இணைந்து நடிக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை சசி இயக்கியுள்ளார். லிஜோமோல் ஜோஸ், காஷ்மிரா பர்டேஷி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்தப் படத்தின் போஸ்டரிலிருந்து பாடல்கள் வரை வெளியாகி கவனம் பெற்ற நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தை அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. மேலும் பிச்சைக்காரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பிரசன்ன குமார் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படத்தை தயாரித்த மாதவ் மீடியா இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.