இந்தியாவின் புகழ்பெற்ற வழக்குரைஞர், திரு.ராம் ஜெத்மலானி அவர்களை வைக்கோ சந்திப்பு!!

உடல்நலக் குறைவுற்று வீட்டில் ஓய்வில் இருக்கின்ற இந்தியாவின் புகழ்பெற்ற வழக்குரைஞர், மாநிலங்கள் அவை உறுப்பினர் திரு. ராம் ஜெத்மலானி அவர்களை,தலைவர் வைகோ அவர்கள்
இன்று தில்லியில் அவரது இல்லத்தில் சந்தித்தார்.


தலைவர் வைகோவைக் கண்ட ராம் ஜெத்மலானி அவர்கள்
மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.அப்போது தலைவர் வைகோ,

உங்கள் சகோதரன் உங்கள் தோழன் வைகோ "மாநிலங்கள் அவை" உறுப்பினராகப் பொறுப்பு ஏற்று இருக்கின்றேன் என்றார்.

அதைக் கேட்டு ராம் ஜெத்மலானி,
You are the same tiger
God bless you  " #நீ_அதே_புலி_தான்"
கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்
என்றார்.

அதற்கு தலைவர் வைகோ
You are the same lion
"நீங்கள் அதே சிங்கம் தான்" என்றார்.

ஜெத்மலானி அவர்களின் தலையை தலைவர் வைகோ வருடியபோது அவர் உணர்ச்சி வயப்பட்டு, நெஞ்சம் நெகிழ்ந்து #நன்றி_நன்றி என்றார்.

நீங்கள் முழு உடல் நலம் பெற்று
மாநிலங்கள் அவைக்கு வருவீர்கள் என்றார் வைகோ.

Today, I am happy
இன்றைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றேன்
என்றார் ஜெத்மலானி.

தலைவர் வைகோ விடைபெறுகையில்,
ஜெத்மலானியின் உதவியாளர்கள்,

கடந்த சில நாள்களாக
ஐயா யாரிடமும் பேசவில்லை.
இன்று உங்களிடம்தான்
பேசினார் You are lucky என்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.