காற்றில்கரையும் குரல்களின் மொழி!!

அமர்நாத்தின் குளிர்ந்த நீரில்
கரைந்தோடும்
காஷ்மீரிகளின் குருதிவாடையில்
கொப்பளிக்கிறது சுதந்திரதாகம்

ஜம்முவிலும்
சிறீநகரிலும்
சதா அலைந்துகொண்டிருக்கும்
ஒற்றை மேகங்களில்
கவிந்து தெறிக்கிறது
மரணவாடை

ஏதுமறியாக்குழந்தைகளின்
கீச்சிடும் ஓலங்களை
கிழித்தேகுகின்றன
ஜெட் விமானங்களின்
அகங்கார ஆவர்த்தனங்கள்

காஷ்மீரின்
அப்பிளையும் ரோஜாக்களையும்
சுவைக்கும் மனிதர்களின்
நாக்குகள் உயிர்த்தும்
காதுகள் இறந்தும் போனதேன்?

சில்லிட்டு தழுவும்
வெண்பனித்தூவல்களிடையே
முறைத்துக்கொண்டிருக்கும்
துப்பாக்கிக்குழல்கள்
பெண்களதும் விதவைகளதும்
இரவுகளை கிழித்துப்போட்டிருக்கின்றன

இன்னுமொரு துப்பாக்கிவெடியின்
புகையில்
ஒரு போர்மேகம் துளிர்கொள்ளமுன்
வாருங்கள் எல்லோரும்..
காஷ்மீரத்தின் அப்பிளையும் ரோஜாக்களையும்
உள்ளன்போடு நேசிப்போம்.

ஜெகா.

(காஷ்மீர வீரர் யாசினுக்கும் தோழர்களுக்கும் இது சமர்ப்பணம்)





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.