பயங்கரத்தை எதிர்த்துப் போராடும் குழந்தைப் போராளிகள்!!
சிறுவர்கள் பயங்கரவாதிகள் அல்லஅவர்கள் தம்மீது திணிக்கப் படும் பயங்கரத்தை எதிர்த்துப் போராடும் குழந்தைப் போராளிகள் அல்லது பக்குவப்படத் தொடங்கும் போராளிகள்
போராளி என்பது பள்ளியில் படித்து வரும் பட்டமல்ல அதற்கு என்றொரு சோதனையும் இல்லை
எவனொருவன் தன் சுதந்திரத்தை சோதிக்கின்றானோ அவன் மீது காட்டும் காட்டாற்று வெள்ளம் போன்ற எதிர்த்தனம் போராளியை உருவாக்கி விடுகின்றது
எவன் ஒருவன் ஒடுக்க நினைக்கின்றானோ
அவனின் ஒடுக்குமுறைக்கெதிராக அணியப்படும் அல்லது ஆயுதமாக செய்யப்படும் உத்தியாக போராளிகள் உருவெடுக்கிறார்கள்
சிறுவர்களென்ன குழந்தைகளே போராடுகின்றன
பிறந்தவுடன் அம்மா நான் ஆரோக்கியமாக உலகுக்கு வந்துவிட்டேன் எனக் கூறி போராடுகிறது தனது சுதந்திரத்தின் இருப்பை, தன்னிடம் உயிர் இருப்பதை அழுகையால் போராடுகிறது
அப்படி இருக்க
இந்திய. இராணுவத்தால் தாக்கப்பட்ட, அநீதி இழைக்கப்பட்ட, நிலம்பறிக்கப்பட்ட, காஸ்மீரிய சிறுவர்கள் எப்படிப் போராடாமல் இருப்பார்கள்
அவர்கள் கற்களை எடுத்து இந்திய இராணுவத்தை நோக்கி வீசுகின்றார்கள்
அவர்கள் போராடுகின்றார்கள்
அந்தக் கற்கள் நாளை துப்பாக்கிகளாக மாற வேண்டுமா அல்லது அவர்களுக்கு ஏற்ப பொத்தகங்களாக மாறவேண்டுமா என்பதை இந்தியாதான் மன்னிக்கவும் ஈழத்திலுள்ள அப்பாவித் தமிழர்களைக் கொன்ற இந்தியாவின் சனநாயகம் தான் தீர்மானிக்க வேண்டும்
ஏனெனில் நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டுமென்பதை எதிரிதான் தீர்மானிக்கிறான் என்பது
போராளி புரட்சியாளன் சேகுவேராவின் தத்துவ வாக்கு அது பொய்யாகிப் போகுமா என்ன
த.செல்வா
.jpeg
)





கருத்துகள் இல்லை