காதல் சோலையில்.!!

தனிமையில்
தனித்து.. தவித்திருந்த...
இந்த யாக்கைக் குடுவையின்
வெற்றிடத்தை - நின் காதல்
நிரப்பிக்கொள்கிறது...

ஒவ்வொரு இரவிலும்
ஓர் ஒளிப்பிழம்பாய்
எனை ஊடுறுவும் - நின்
கனவுகளில் உன் வாசமே
சுவாசமாய்... மனம் உண்டு,
மதுவுண்ட வண்டாய்
சிறகடித்துப் பறக்கிறது
காதல் சோலையில்...

காமம் கலக்காத
முத்தங்களால்
நீயும் நானும் 
சிறு கிள்ளையாகி
ஓர் சுவர்க்கத்தை
சிருஷ்டித்து
நமக்கான வாழ்வை
நெய்துகொள்வோம்
அழகாய்... இதமாய்...

அங்கே
நமை மறந்து...
ஈரம் சொட்டும் காதலுக்குள்
நனைந்து மேட்சம் காண்போம்.

-சங்கரி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.