சுவர்களில் அறையப்பட்ட கடவுளர்கள்!!

இழவு விழுந்த எங்கள் வீட்டின் சுவர்களில்
புன்னகைத்தபடி கொலுவிருக்கிறார்கள்

பன்றிக்கு பால்கொடுத்த பரம்பொருளும்
பாரச்சிலுவை சுமந்த பரமபிதாவும்
போதிமரத்துப் போதகரும் அல்லாவும்

சமாதனம்
இணக்கப்பாடு;
தர்ம அதர்மங்கள்
உரிமைமீட்புக்கள் பற்றிய
நிறைய புராணக்கதைகள் சொல்லியிருக்கிறார்கள்
எங்களிற்கு

இவர்களின் ஈனங்களால் நாங்கள்
காணாமல் போயிருக்கிறோம்
ஏரிக்கப்பட்டும்
கருக்கப்பட்டும்
காகங்கள் உவக்கும் பிணங்களாய்
தெருவில் வீசப்பட்டிருக்கிறோம்

கடவுளர்கள் எங்களைப் பார்த்துப் புன்னகைக்கிறார்கள்
நாங்கள் எப்போதும் தங்கள் விசுவாசிகளென்று

-- 09.08.2013

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.