அரசியல் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செய்யவேண்டியது என்ன?
“எங்களுக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. ஆட்சித்தலைவர்கள்,பெரும்பான்மை இனத்தலைவர்கள் தாங்கள் விரும்புகின்ற சில கருமங்களை நிறைவேற்றுவதற்காக அரசியல் தீர்வு ஏற்படுவதையும் அதிகாரப்பகிர்வு ஏற்படுவதையும் தாமதிப்பதற்கு முயற்சிக்கிறார்கள்.ஆகவே அடுத்த ஓரிரு மாதங்களில் தீர்க்கமான முடிவெடுப்போம்” என்று யாழ்ப்பாணத்தில் 30 ஜூன் 2019 அன்று நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு.ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்
இந்த மாநாட்டில் இருந்தது எதிர்வரும் மூன்று மாதத்திற்குள் அரசு நம்பகத்தன்மையும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளையும் உறுதிபடுத்த வேண்டும் அல்லது ஜனநாஜக வழிகளில் மக்களை அணிதிரட்டி போராட்டங்களில் ஈடுபடுவதென இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மாநாடு தீர்மானிக்க வேண்டும்” என்று மேற்படி மாநாட்டில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்
இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனும் தமிழ் அரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவும் இரண்டு, மூன்று மாதங்கள் என கால நிர்ணயம் செய்த 15 நாட்களின் பின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரண்டு வருடங்களில் அரசியல் தீர்வு காணலாம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கால எல்லைக் கணக்குகளை அடித்துமூடிப் பின்வருமாறு பேசியுள்ளார்.
“அதிகாரப்பகிர்வின் மூலம் இரண்டு வருடங்களுக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தி கொடுப்பேன்”.
“நீண்டகாலமாக உள்ள இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு-அதிகாரப்பகிர்வை வழங்குவதற்கு-எங்களது கட்சியும் நானும் தயாராக இருக்கிறோம். அதேபோல பெரும்பாலான சிங்களவர்களும் அதிகாரப்பகிர்வை ஏற்றுக்கொண்டு இணங்கிப்போகும் நிலை ஏற்படவேண்டும்”.
”அடுத்த இரண்டு வருடத்திற்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வை காண வேண்டும் ஆகவே அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக நாம் கொண்ட படிப்பினைகளை கவனத்தில் கொண்டே செயற்ப்பட வேண்டும் இதற்கமைய அடுத்த இரண்டு வருடத்திற்குள் நிச்சயமாக இனப்பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்துவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்”.
ஜூலை 15 ஆம் திகதி சுன்னாகம் ஸ்கந்தரோதயா கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்
இதன் மூலம் 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் அரசியல் தீர்வு காணப்பட்டுவிடும் என்று அடித்துக்கூறிய சம்பந்தனின் பேச்சுக்கள் அனைத்தும் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் திகதி மேற்படி பேசிய ரணிலின் பேச்சோடு முற்றாக அடிபட்டு போய்விட்டன.
இப்போது தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டிய கட்டாயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் கடந்த காலங்களில் தெரிவிக்கையில் அரசியல் தீர்வு காணப்படாது விட்டால் தாம் பதவி விலகுவோம் என்று திட்டவட்டமாக பின்வருமாறு அறிவித்திருந்தார்.
“புதிய அரசியல் யாப்பு உருவாக்கமும் அதன் மூலமான அரசியல் தீர்வு காணும் விடயமும் தோல்வியில் முடிந்தால் மறுகணமே தான் பதவியிலிருந்து விலகிவிடுவேன்” என்று கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் திரு.எம்.ஏ.சுமந்திரன் தொடர்ந்து பின்வருமாறு கூறினார்.
“ஒரு தீர்வுப்பொதியினை கொண்டுவரப்போகும் ரயில் அந்த தீர்வுப்பொதியினை நிலைநிறுத்த முடியாது போய்விட்டால் நான் பதவி விலகுவேன்” என்றும் தெரிவித்திருந்தார்
இந்த ஆட்சிக் காலத்தில் அரசியல் தீர்வு சாத்தியமில்லை என்றும் பேய்க்குத் தவணை போட்டது போல மேலும் இரண்டு ஆண்டுகளை பின்தள்ளி யாழ்ப்பாண மண்ணில் வைத்து ஒரு ஏமாற்றுகரமான தவணையை ரணில் போட்டுள்ளார்.யாழ்ப்பாணம் வரும் பிரதமர்கள் அவ்வப்போது புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவது வழக்கம். 1954 ஆம் ஆண்டு யாழ்ப்பாணதிற்கு விஜயம் மேற்கொண்ட அன்றைய பிரதமர் சேர்.ஜோன்.கொத்தலாவல கொக்குவில் இந்துக் கல்லூரியில் உரையாற்றுகையில் சிங்களத்துடன் கூடவே தமிழையும் தான் உத்தியோக மொழி ஆக்குவேன் என்று உறுதியளித்தார். ஆனால் அவர் கொழும்பு திரும்பியதும் அதனை மறுத்து அறிக்கை விட்டார்
தமிழ் தேசிய கூடமைப்பினர் 2016 ஆம் ஆண்டுக்குள் தீர்வு காணப்பட்டுவிடும் என்று கூறி அவ்வாறு அவ்வாண்டு இறுதிக்குள் தீர்வு காணப்படாத நிலையில் பின்வந்த ஒவ்வொரு பண்டிகை நாட்களையும் குறித்து தீபாவளிக்குள் தீர்வு காணப்பட்டுவிடும், வரும் சித்திரை புதுவருடப் பிறப்புக்குள் தீர்வு காணப்பட்டுவிடும் என்று பண்டிகைகளை முன்னிறுத்தி மக்களை ஏமாற்றும் காலம் கடத்தும் உறுதி மொழிகளை வழங்கிவந்தனர் ஆனால் ரணில் கூறிய மேற்படி பேச்சின் பின்பு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இனி எந்த சாக்குப் போக்குகளையும் சொல்ல முடியாது.
அவர்கள் 2015 ஆம் ஆண்டு கூறிய தீர்வுக்கான ஒருவருட காலத்தையும் தாண்டி இந்த அரசாங்கத்தின் 5 வருட ஆட்சிக் காலத்திற்க்குள் அரசியல் தீர்வு இல்லை என்கின்ற உண்மை தெளிவான நிலையில் தோல்விக்குப் பொறுப்பேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உடனடியாக பதவிவிலக வேண்டியதே வரலாற்றின் கட்டளையுமாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகக்கூடாது என்ற அன்றைய பிரதமர் டேவிட் கமரனின் நிலைப்பாட்டுக்கு மாறாக பிரிட்டனில் நிகழ்ந்த பொது வாக்கெடுப்பின் முடிவு அமைந்தபோது தன் தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் டேவிட் கமரன் ஜூன் 2016 அன்று பதவி விலகினார். அதேவேளை பொது வாக்கெடுப்பின் தீர்ப்புக்கு அமைய பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிச்செல்வதற்க்கான பணியை உரிய காலத்தில் நிறைவேற்ற முடியாதுபோன தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் தெரேச மே இவ்வாண்டு ஜூலை மாதம் பதவிவிலகினார்.
இத்தகைய முன்னுதாரணங்களை பின்பற்றியும், புதிய அரசியல் யாப்பை உருவாக்கவும் அதில் அரசியல் தீர்வு காணத்தவறினால் பதவி விலகுவோம் என கூட்டமைப்பினர் கூறியதற்கு இணங்க அவர்கள் பதவிவிலகி செல்லவேண்டும்.
அவர்கள் அவ்வாறு தமது நாடாளுமன்ற பதவிகளை துறக்கும்போது இலங்கையின் அரசியல் யாப்பின்படி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அந்த இடத்திற்கு நியமிக்கவும் முடியும். அவ்வாறு அவர்கள் பதவி விலகி மாற்று அரசியல் பேசும் அரசியல் தலைவர்களை அந்த இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்க முடியும்.
இத்தகைய அரசியல் நாகரிகத்தை மேற்ப்படி தமிழ் தேசிய கூடமைப்பு தலைவர்களிடம் எதிபார்க்க முடியாதானாலும் இதனை வற்ப்புறுத்தி முன்வைக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
மு.திருநாவுக்கரசு
(04.08.2019 தினக்குரல்)

.jpeg
)

கருத்துகள் இல்லை