டி20: போராடி பெற்ற வெற்றி!
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் இந்தியா போராடி வென்றுள்ளது.
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியில் புரான் 20 ரன்களும், பொல்லார்டு 49 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுடனும் ரன் ஏதும் அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் அந்த அணி 95 ரன்கள் எடுத்தது.
இந்திய தரப்பில் நவ்தீப் சைனி 3, புவனேஸ்வர் குமார் 2, வாசிங்டன் சுந்தர், கலில் அகமது, குருணால் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கினாலும் இந்திய வீரர்களுக்கு அது அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவண் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க வீரர் ரோஹித் ஷ்ர்மா இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டு 24 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி தன் பங்குக்கு 19 ரன்கள் சேர்த்தார், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார், மனிஷ் பாண்டே 19 ரன்களிலும், குணால் பாண்டியா 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து ஜடேஜாவும் வாசிங்டன் சுந்தரும் இறுதிநேரத்தில் இந்திய அணியின் வெற்றிக்கான ரன்களை அடித்தனர். நவ்தீப் சைனி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை