2கே கிட்ஸுடன் மோதும் 90’ஸ் கிட்ஸ்!

ஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவர இருக்கும் கோமாளி திரைப்படத்தின் கலகலப்பான டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.


ஏற்கனவே ஜெயம் ரவியின் ஒன்பது வித்தியாசமான தோற்றங்களுடன் கூடிய போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. படத்தில் இடம்பெறவிருக்கும் சென்னை வெள்ளம் பற்றிய காட்சிகள், சமீபத்தில் வெளியாகி 90’ஸ் கிட்ஸ்களின் நினைவுகளை மீட்டெடுத்த பாடல்கள் போன்றவை ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி இரவு 7 மணிக்கு இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியானது.
கோமாவிலிருந்து எழுந்த ‘கோமா’ளி!
அடர்ந்து வளர்ந்த தாடி மீசை என்று கரடுமுரடான தோற்றத்தில் இருக்கும் ஜெயம் ரவி மருத்துவமனையில் கண் விழிக்கிறார். தன் தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சியடையும் ஜெயம் ரவியிடம், யோகி பாபு “நீ ஜஸ்ட் 16 வருஷமா கோமாவில இருந்தேடா” என்று கூறி அதிர்ச்சியில் இருக்கும் அவரை இன்னும் அதிர வைக்கிறார்.
16 வருடங்களுக்கு முன்னரான நினைவுகளுடன் இருக்கும் ஒருவர், தான் எதிர்பார்க்காத, தன்னால் ஏற்கமுடியாத மாற்றங்களைக் கண்டு அதிர்வதும், அவற்றை நினைவூட்டுவதாகவும் திரைக்கதை அமையும் என்று தெரிகிறது. சமூக வலைதளங்களில் அதிக அளவில் பேசு பொருளாக வலம் வந்துகொண்டிருக்கும் 90’ஸ் கிட்ஸ் 2கே கிட்ஸின் வேறுபாட்டை வெள்ளித்திரையில் முழுநீள படமாக எடுக்க இந்த ‘கோமா’ளி முற்பட்டுள்ளது என்பது தெரிகிறது.
ஏற்கனவே வெளியாகியிருந்த இப்படத்தின் ‘ஒலியும் ஒளியும்’ பாடலில்
சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம் பாட்டி ஆகிருச்சே
இப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து ஜோடி சேர்ந்துருச்சே
என்று கலாய்த்து ரஜினிகாந்த் ரசிகர்களைச் சீண்டியவர்கள், இந்த டிரெய்லரின் இன்னும் ஒருபடி மேலே சென்று கலாய்த்து பகைமையை அதிகப்படுத்தியுள்ளனர். கோமாவிலிருந்து எழுந்து 16 வருடங்கள் கடந்துவிட்டதை நம்பாத ஜெயம் ரவிக்கு டிவியில் “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று ரஜினிகாந்த் கூறும் வீடியோவைப் போட்டுக்காட்டுகிறார் யோகி பாபு. அதைப்பார்த்து ஜெயம் ரவி பதற்றத்துடன் “ஏய், இது 96 யாரை ஏமாத்துறீங்க” என்று கேட்பதாக அந்தக் காட்சி அமைந்துள்ளது.
வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து, ஜெயம் ரவியின் நடிப்பில் 24ஆவது படமாக வெளிவரவிருக்கும் கோமாளி திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, சம்யுக்தா ஹெக்டே மற்றொரு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.