வல்லரசு நாடுகளினால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழிக்கப்படலாம்-பொ.கஜேந்திரகுமார்!!

தமிழ் மக்களின்அரசியல் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் வகையில் செயல்படக் கூடிய முதுகெலும்பு உள்ள தலைமைகள் உறுவாகுவதை பிராந்திய வல்லரசுகள்  விரும்பவில்லை. தமிழ் மக்களின்     அபிலாசைகளை வல்லரசுகளிடம் அடகு வைப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தயாராக இல்லை. ஆகவே எதிர்வரும் தேர்தல்களில் வல்லரசுநாடுகளினால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தோற்கடிக்கப்படலாம் அல்லது அழிக்கப்படலாம் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகிறார் . இவ்வளவு காலமும் இந்திய நலனுக்கு எற்ப இயங்கி வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் தனது ஆதரவை இழந்த நிலையில் மாற்றுத் தரப்பும் தங்களுடைய முகவர்களாக இருக்கும் வகையில் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் ஒருங்கிணைக்க வல்லரசுகள் முயற்சிப்பதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.