ஓர் நாளில் உன்னுள் நெருடும்...!!

காதல் இப்படித்தான்
என் பார்வைகள் எங்கிலும்
நின் காட்சியை கலந்தே
செய்கிறது...

காதல் படர்ந்த கனவுகளில்
முத்தென
முத்துமிட்டுச் செல்லும்
கண்ணீர்த்துளிகலெல்லாம்
நின் நினைவுகள்

நின் நினைவைப் பிழித்து
நானெழுதும்
அன்பின் வருடல்கள்
ஓர் நாளில்
உன்னுள் நெருடும்...

அப்போது
காதலையும் கனவுகளையும்
கலந்தே விதைக்கும்
அந்நாளில் வருவேன்
அறுவடை செய்துகொள்ள..

அதுவரை...
உனதான நினைவுக்குள்
எனதான நிறைவுமாய்
கைகோர்த்து நெகிழ்வாய்..
கலந்திருப்பேன் கவிதைக்குள்......
எனை கவியாக்கிய கண்ணே
உனக்காக....💞

-சங்கரி

No comments

Powered by Blogger.