அகில இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்று கூடல் !!

இலங்கைத்   தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின்  ஏற்பாட்டில்   ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 13 ஆம் திகதி செப்டம்பர்  மாதம் [ 13.09.2019 வெள்ளிக்கிழமை ] கொழும்பில் இடம்பெறஉள்ளது 
 இவ் ஒன்று கூடல் குறித்து  கடந்த 11.08.2019  அன்று  தலைவர்  ஆர் .சிவராஜா தலைமையில் இடம்பெற்ற நிர்வாகசபைக் கூட்டத்தின் போதே தெரிவிக்கப் பட்டது . 
எனவே  குழுத் தீர்மானத்திற்கு அமைய  அனைத்துத் தமிழ் ஊடகவியலாளர்களும்  தங்கள் பெயர் , முகவரி, தொடர்பு இலக்கம்  அலுவலக முகவரி உட்பட அனைத்து விபரங்களுடன் சுயமாக தயாரிக்கப் பட்ட விண்ணப்பப் படிவங்களை இம்மாதம் 25 ஆம் திகதிக்கு [ 25.08.2019] முன்பு  முற்பதிவு செய்துகொள்ளும் படி  அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் . வடமாகாண ஊடகவியலாளர்கள் தங்கள் பதிவுகளை  வடமாகாண இணைப்பாளர்களான  யாழ் .தர்மினி பத்மநாதன் 
jaaltharmini@gmail .com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 0776544158 என்ற இலக்கத்திலும் ,

 முல்லை மாவட்டத்தைச்  சேர்ந்த   யூட் நிமலன்  ஆகியோரைத் தொடர்பு கொண்டு  தகவல்களை பெற்றுக் கொள்ள  முடியும் . 

மேலும் , தலைவர் . ஆர் .சிவராஜா , செயலாளர் யோ . நிமல்ராஜ் ,[தினக்குரல் ] பொருளாளர்  ப.விக்னேஸ்வரன்  [சூரியன் fm ]  மற்றும் மட்டக்களப்பு மாவட் ட  இணைப்பாளர்  எஸ் .மணிசேகரன் ஆகியோரையும் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ளும் படி அறிவிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . 

[யாழ்.தர்மினி பத்மநாதன் ]

No comments

Powered by Blogger.