முல்லைத்தீவு முன்னணி அமைப்பாளர் மீதான கொலை மிரட்டல்க்கு காவல்துறையில் வழக்கு பதிவு!!

தமிழ்த்தேசிய மக்கள் முன்ணணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரான திலகநாதன் கிந்துஜனுக்கு வவுனியா பன்றிகெய்தகுளம் கிராம அலுவலரான நடராசா குபேரனால் பகிரங்கமாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
போலிமுகப்புத்தக கணக்கின் மூலம் இனந்தெரியாத நபர் ஒருவர் குறித்த கிராம அலுவலரின் ஊழல் செயற்பாடுகள், மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் அத்தோடு இக் கிராம அலுவலரின் தந்தையார் 72 வயதிலும் பல சமூக சீர்கேட்டு சம்பவங்களுக்கு காரணமாக விளங்குவதையும் எழுதி முகப்புத்தகம் வாயிலாக வெளியிட்டிருந்தார்

திலகநாதன் கிந்துஜனின் சமூக செயற்பாட்டு திட்டங்களையும் குற்றங்களை தட்டிக்கேட்கின்ற மனநிலையினையும் நன்கு அறிந்திருந்த கிராம அலுவலர் குபேரன் அவர்கள்,
தனது அந்தரங்க விடயங்களை கிந்துஜன் தான் பதிவிட்டுள்ளார் என பூரணமாக கற்பனை செய்து அவரை திட்டமிட்டு கொலை செய்வதற்கான மிகுந்த ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாக அறிய முடிகின்றது.

செய்யாத குற்றத்திற்கு தான் கொலைத்தண்டனையை ஏற்க முடியாத நிலையை உணர்ந்த கிந்துஜன் மாங்குளம் பொலீஸ் நிலையத்தில் கிராம அலுவலருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.