நீ வரும் வேளைக்காய் ஏக்கம் கொண்டேன் கண்ணா.!!

நின் அமுத கானம் கேட்கவே
தாகம் கொண்டேன்
கண்ணா...

நின் ஸ்பரிசம் உணரவே
என்னுயிர் சுமந்தேன்
கண்ணா...

காத்திருக்கும் பொழுதெல்லாம்
கனவாய் போக ஆசை கொண்டு
காணும் வரம் கணப்பொழுதில்
ஆக வேண்டி நின்றேன் கண்ணா..

காற்றும் நுழையா நம் நெருக்கத்தின்
சாட்சியாய் காதல் நினைவு கொண்டு
ஊடலும் கூடலும் இணைந்தே
உள்ளங்கையில் ரேகை நெய்வோம்.

-சங்கரி

No comments

Powered by Blogger.