குடும்பங்களைக் குறிவைக்கும் சசிகுமார்!!
சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் ராஜவம்சம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ளார்.
சுந்தர் சி.யிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் கே.வி.கதிர்வேலு. இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ராஜவம்சம். இதில் சசிகுமாருக்குக் கதாநாயகியாக நடித்துள்ளார் நிக்கி கல்ராணி. டைட்டிலுக்கு ஏற்றாற்போல் பெரிய குடும்பப்படமாக இருக்கும் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் மொத்த குடும்பத்தின் குரூப் போட்டோ இடம்பெற்றுள்ளது.
சசிகுமார், நிக்கி கல்ராணி, விஜயகுமார், ராதாரவி, சிங்கம் புலி, யோகி பாபு, மனோ பாலா என 24 பேர் இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளனர்.
90களின் இறுதியில் தமிழ் சினிமாவில் குடும்பங்களை மையமாகக் கொண்ட படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. அதன்பின் இளைஞர்களை மையமாகக் கொண்டு காதல், ஆக்ஷன், காமெடி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட படங்களே அதிகளவில் வெளியாகிவந்தன. இருப்பினும் குடும்பங்களை மையமாகக் கொண்ட படங்களுக்குத் தமிழ் சினிமாவில் இப்போதும் வரவேற்பு உள்ளது என்பதை நிரூபித்தது கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படம்.
அந்தவகையில் இந்தப் படமும் வரவேற்பு பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதேசமயம் மற்றொரு போஸ்டரில் சசிகுமார் கையில் உலோகத்தாலான ஆயுதம் ஒன்றை வைத்து ரத்தம் வடிய நின்றிருக்கிறார். இந்த போஸ்டர் ஆக்ஷன் காட்சிகளுக்கும் படத்தில் இடம் உள்ளது என்பதை விளக்குகிறது. சாம்.சி.எஸ் இசையமைக்கும் இந்தப் படத்தை டி.டி.ராஜா தயாரிக்க, டி.ஆர்.சஞ்சய் குமார் இணைந்து தயாரிக்கிறார்.

.jpeg
)

கருத்துகள் இல்லை