துப்பாக்கி கேட்டு அபிவிருத்திகுழு கூட்டத்தில் அடைக்கலநாதன் கோரிக்கை!!
வவுனியா அபிவிருத்திகுழு கூட்டத்தில் துப்பாக்கி இருந்தால் எமக்கும் தாருங்கள் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரியுள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அபிவிருத்திகுழு கூட்டத்தில் அண்மைக்காலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சோட்கன்கள் மீண்டும் எடுக்கப்பட்டமையினால் தற்போது விவசாயிகள் வன விலங்குகளால் பெரும் துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக தெரிவித்திருந்தார்.
அத்துடன் விவசாயிகளுக்கு வனவிலங்குகளின் தாக்கத்துக்குள்ளாகி வருவதனால் அவர்களது பொருளாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. எனவே அவர்களுக்கு மீண்டும் துப்பாக்கிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் சிவசக்தி ஆனந்தன் என தெரிவித்தார்.
இதன்போது எவ்வாறு துப்பாக்கியை வழங்கலாம் என அபிவிருத்திகுழுவின் இணைத்தலைவரான ரிஷாட் பதியுதீன் பொலிஸாரிடம் கேட்டபோது, அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் பெறவேண்டும் என தெரிவித்தார்.
அத்துடன் இராணுவ அதிகாரியும் குறித்த அனுமதியை இராணுவத்தினர் வழங்க முடியாது எனவும் தெரிவித்த நிலையில் வவுனியா அரசாங்க அதிபர் குறித்த விண்ணப்பம் மாவட்ட செலயத்தில் பெறப்பட வேண்டும் எனவும் அவ் விண்ணப்பத்தினை பெற்று அதற்குரிய பொறிமுறைகளின் பிரகாரம் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க முடியும் எனவும் அதன் பின்னர் அனுமதி பெற்று அதனை வழங்க நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
இதன்போது குறுக்கிட்ட வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திகுழுவின் இணைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தமக்கும் ஒரு துப்பாக்கியை வழங்கினால் நல்லது என நகைச்சுவையாக தெரிவித்தார். இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பழைய ஞாபகங்கள் வந்துள்ளதுபோல் உள்ளது என செல்வம் அடைக்கலநாதனை பார்த்து கூறினார்.

கருத்துகள் இல்லை