கோத்தபாய ஜனாதிபதியாவதற்கு தமிழர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்! மகிந்த ராஜபக்ச தகவல்!

உண்மையில் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதற்கு தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கோத்தபாய ராஜபக்சவிற்கு தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற முடியாது என்ற கருத்தில் உண்மை இருப்பதாக தெரியவில்லை.

உண்மையில் புதிய அரசியலைப்பு திருத்தம் காரணமாக அரசாங்கத்தில் பிரதமருக்கு அதிகமான அதிகாரங்கள் உள்ளன. நான்தான் பிரதமர் வேட்பாளராக இருக்கின்றேன். எனவே நாம் இருவரும் இணைந்துதான் பணியாற்ற வேண்டியிருக்கும்.

தமிழ், முஸ்லிம் மக்களுடன் கோத்தபாயவுக்கு எந்த பிரச்சினைகளும் இல்லை. உண்மையில் இவர்போன்று ஒருவர் வருவதற்காக தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்.

காரணம் தமிழ் மக்களுக்கு அமைதியாக வாழும் சூழலை கோத்தபாய ராஜபக்சதான் ஏற்படுத்தி கொடுத்தார். முஸ்லிம் மக்களுக்கும் அவர் சேவையாற்றி இருக்கின்றார். ஆனால் தவறான கருத்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.

அதை நாம் திருத்தி அமைப்போம். அதனை நாம் சிறப்பாக கையாள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.