உண்மையை போட்டு உடைத்த பிக்பாஸ் புகழ் மதுமிதா..!

தன்னைப் பொதுவெளியில் குற்றவாளி போல்,பணத்தாசை பிடித்தவள் போல் சித்தரிக்கும் விஜய் டிவி. நிர்வாகம் பொதுமக்களிடம் உண்மை நிலவரத்தை விளக்கவேண்டும் என்றும் இல்லையேல் பிக்பாஸ் குறித்த பல உண்மைகளை வெளியிடவேண்டி வரும் எனவும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட நடிகை மதுமிதா கூறியுள்ளார்.


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் மற்றும் சாக்‌ஷி என 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி, கவின், லாஸ்லியா, முகென், மதுமிதா ஆகியோர் இருந்த நிலையில், மதுமிதா திடீரென வெளியேற்றப்பட்டார்.
தனியார் ஆப் டாஸ்க்கில் மதுமிதா தெரிவித்த கருத்து கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள காவிரி நதிநீர் பங்கீடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததாகவும், இதற்கு நடிகை ஷெரின் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக தற்கொலைக்கு முயன்ற மதுமிதா போட்டி விதிகளின்படி வெளியேற்றப்பட்டார்.

வெளியே வந்த மதுமிதா தனியார் இணைய தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிக்பாஸ் வீட்டில் ஆண், பெண் பேதம் இருக்கிறது. அங்கு உள்ள ஆண்கள், பெண்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், கடந்த 55 நாட்களாக இதுதான் அங்கு தொடர்வதாகவும் அபிராமி சிறைக்கு சென்ற விவகாரத்திலும் இது தான் நடந்தபோது, தான் தட்டி கேட்டதற்காக தன்னிடம் அவர்கள் சண்டைக்கு வந்ததாகவும் மதுமிதா கூறியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை தனியார் ஆப் டாஸ்கில் நான் என்னுடைய கருத்தை சொன்னேன். வருண பகவான் கூட கர்நாடகாக்காரர் தான் போலிருக்கு. நமக்கு மழையே கொடுக்க மாட்டேங்கிறார். தயவுசெய்து வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என்று கூறியபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஷெரீன், கர்நாடகாவை சேர்ந்த நான் இங்கு இருக்கும் போது எப்படி நீ இப்படி ஒரு கருத்தை கூற கூடாது என்றும், இது ஒன்றும் உன்னுடைய சமூக வலைதளம் கிடையாது என ஷெரீன் கத்தியதாகவுயாகவும் கூறிய மதுமிதா, தனியார் ஆப் ஒரு சமூக வலைதளம் அதில் என்னுடைய கருத்தை சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என க்ஷெரினிடம் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அதை ஒப்புக்கொள்ளாத க்ஷெரின் நீ என்ன எப்ப பார்த்தாலும் தமிழ் பெண் தமிழ்ப்பெண்னுன்னு சொல்ற. எங்கே தமிழக மக்களுக்காக உயிரை கொடுக்க முடியுமா எனக் கேட்டதால் தான் நான் எனது கையை அறுத்துக்கொண்டதாகவும் மௌதுமிதா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நான் கையை அறுத்துக்கொண்ட போது எனக்கு ஆதரவாக இருந்தது சேரனும், கஸ்தூரியும் தான்என்றும், வேறு யாரும் என்னிடம் வரவில்லை எனவும், இனி பிக்பாஸ் பக்கம் தலை வைத்துக்கூட படுக்க மாட்டேன்’என்றும் பல பகீர் தகவல்களை மதுமிதா வெளியிட்டுள்ளார் .
இந்நிலையில் விஜய் டிவியிலிருந்து தனக்கு வரவேண்டிய பாக்கித் தொகைக்காக ஆடியோ மூலம் தற்கொலை மிரட்டல் விடுப்பதாக விஜய் டி.வி. நிர்வாகம் மதுமிதா மீது பொலிஸில் புகார் அளித்திருந்தது.
இந்த திடீர் புகாரால் அதிர்ச்சி அடைந்த மதுமிதா சற்றுமுன்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார்.
அதில் விஜய் டி.வி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை எனக்கு பேரதிர்ச்சி அளிக்கிறதாகவும், தனக்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள நிர்வாகம் அனுப்பும் மருத்துவர்களையே பயன்படுத்துகிற அளவுக்கு நான் இன்னும் கூட அவர்களின் விதிக்குக் கட்டுப்பட்டே நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தான் இருக்க விஜய் டி.வி நிர்வாகம் தன்னைத் தொடர்பு கொள்வதை விடுத்து, போலீஸுக்குச் சென்றதை தன்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை என்றும் , இப்போதும் கூட உங்களைச் சந்திப்பதற்கு விஜய் டி.வி நிர்வாகத்தையே தொடர்புகொண்டபோது, அனைத்தும் லைன்களும் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாகவும், மதுமிதா தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.