நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்!!📷

இந்த இருபத்தி நான்காம் திருவிழா இலட்சோப இலட்சம் மக்கள் இவ் விழாக்காண ஒவ்வொரு வருடமும் அந்த அழகன் குமரனை ஆயிரம் கண்கொண்டு காண பெருந்திரள் ஆக கூடி சண்முக பெருமானை சொர்ண சொருபமாய் விளங்கும் யாழ்ப்பாணத்திலே மிக பழமையும் பெருமையும் வாய்ந்த இரத்தின இரதத்தின் மீது ஆயிரம் கோடி சூரியன் எழுந்துவந்தால் எப்படி ஒளி வீசுமோ அப்படி பட்ட பெரொளியாக திகழும் சண்முகப்பெருமானை ஜன வெள்ளத்தின் மீது சுமந்து வந்து உலகம் எங்கிலும் வாழும் தமிழ் பெருமக்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விழாவாக விழாக்கோலம் பூண்டு இருக்கும் நாள் தான் இந்த நல்லையம்பதி இரதோற்சவ தினம் ஆகும்
அதிகாலையிலே உள்வீதியிலே ஈசானம், தற்புருடம், வாமதேவம், அகோரம், சத்யோஜதம், அதோமுகம் என ஆறுமுகம் கொண்ட சண்முகப்பெருமானுக்கு ஆறுமணிகளும் ஓங்கி ஓங்காரமாய் ஒலிக்க வசந்தமண்டபம் என்று சொல்லப்படும் தேவசபையிலே சண்முகபெருமானை சர்வ அலங்கார சொரூபனாக அமரச்செய்து
“ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம் வாழ்க – வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க – செவ்வேள் ஏறிய மஞ்சை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க மாறில்லா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம் “
இவ் மக்களை மேன்மையுறச்செய்ய ஆறு அடுக்குத்தீபங்கள் ஏந்தி அந்தணர்கள் தீப ஆராதனை காட்ட 6.15 மணியளவிலே சண்முகஷேத்திரத்தின் திரைவிலக்கி கந்தக்கடவுள் காட்சிதரும் தரிசனம் காணகண் கோடிவேண்டும்.
வசந்தமண்டப பூஜை , ஸ்தம்ப பூஜை நிறைவுற்று சுவாமி உள்வீதியுலா இடம்பெற்று யாக தரிசனத்துடன் 7.00 மணியளவிலே மிதமான சூரிய ஒளியுடன் ஆங்காங்கே சிறு மழைச்சாரல் உடன் ஷண்முகப்பெருமான் சர்வலோகநாயகன் ஆக தேர் ஏற வரும் காட்சியை வருணிக்க இவ் உலகில் வார்தைகளே இல்லை. அழகன் என்றால் குமரன். குமரன் இத்தனை பேரழாகா என எண்ணதோன்றும் வகையில் இந்த சண்முக இரத ஆரோகணம் ஆனது அமைந்து காணப்படும். தொடர்ந்து ரதம் ஏறி சண்முகப்பெருமான் பக்தர்கள் புடைசூழ நல்லை நகர் வீதிதனில் மெது மெதுவாக வலம் வர ஒவ்வொரு கோபுர வாயில்களிலும் பூக்கள் தூவி சண்முகனை வரவேற்று வீதியுலா வரும் காட்சியானது மிகவும் அற்புதம்.
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.
ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களைச் செய்தது உன் ஒரு
முகம்தான். சிவபெருமானுக்கு ஞான உபதேசம் செய்தது உன் ஒரு
முகம்தான். உன் திருப்புகழைக் கூறும் உன் அடியார்களின் இருவினைகளையும்
தீர்த்துவைப்பது உன் ஒரு முகம்தான். கிரெளஞ்ச மலையை
உருவும்படியாக வேலை ஏவியதும் பின்பு அமைதிகாத்ததும் உன் ஒரு
முகம்தான். உனக்கு எதிரியாக முரண்பட்ட அசுரர்களை வதைத்து அழித்ததும் உன் ஒரு முகம்தான். வள்ளியைத் திருமணம் செய்துகொள்ள விழைந்து
ஆசையுடன் வந்ததும் உன் ஒரு முகம்தான். அவ்வாறெனில், நீ ஆறுமுகனாகக் காட்சி அளிப்பதன் பொருளை நீ எனக்கு அருளிச் செய்ய வேண்டும். தொன்மைவாய்ந்த திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
WED 1:5
கருத்துகள் இல்லை