கிளிநொச்சியில் சிறுகைத்தொழில் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி!!

கிளிநொச்சியில் பெண் சிறுகைத்தொழில் உற்பத்தியாளர்களின் உற்பத்திப்பொருட்களின் கண்காட்சியும், விற்பனையும் இடம்பெற்றுள்ளது.


இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி சேவை சந்தை வளாகத்தில், இந்த கண்காட்சி இடம்பெற்றது.

கரைச்சி, பூநகரி பிரதேசத்தில் உள்ள பெண் கைத்தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களே இதன்போது காட்சிப்படுத்தப்பட்டது. இதன்போது விற்பனையும் செய்யப்பட்டது.

இதன்போது, கண்காட்சியில், கை வளையல், உலர் உணவுப் பொருட்கள், கை பைகள், அலங்கார பொருட்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன.

நீலன் அறக்கட்டளையின் நிதி பங்களிப்புடன் நாறோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.