ஜே.வி.பி. புதிய இலச்சினையுடன்!
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, புதிய இலச்சினையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
புதிய முன்னணி, புதிய அரசியல் கட்சியாக மாற்றப்பட்டு, அதற்கு புதிய இலச்சினையும், நிறமும் வழங்கப்படவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதேநேரம், தேசிய மக்கள் சக்தியின் பிரசாரப் பணிகள் நாளை முதல் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி களமிறங்கியுள்ள நிலையில், அண்மையில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு காலி முகத்திடலில் இடம்பெற்றது. பெருந்திரளான மக்கள் முன்னிலையில் அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை